கோவிட் -19 தொற்றுநோயின் இரண்டாவது அலையில் இந்தியா அலைகழிகிறது. நம்மை அலைகழிக்கும் கொரோனா நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்துக் கொண்டே போகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி சுமார் 2 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பலி எண்ணிக்கையும் சுமார் 4,000 என்ற அளவில் உள்ளது.


மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் சனிக்கிழமை புதிய கொரோனா வைரஸ் தொற்று வழக்குகள் 2.57 லட்சத்திற்கும் அதிகமாக பதிவாகியுள்ளன. 


Also Read | Black fungus ஆபத்தைத் தடுக்க பல் மருத்துவர்களின் Tips 


2021 மே 22 வரை COVID-19 பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய  32,86,07,937 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அவற்றில் 21,23,782 மாதிரிகள் நேற்று பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR)தெரிவித்துள்ளது



நாடு முழுவதும் கிட்டத்தட்ட 9,000 பேர் மியூகோமிகோசிஸ் அல்லது கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய அமைச்சர் சதானந்த கவுடா இன்று தெரிவித்தார். துரிதமாக அதிகரிக்கும் பாதிப்பைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு பூஞ்சை தொற்று சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் முக்கிய மருந்து ஒன்றின் 23,000 கூடுதல் குப்பிகளை அரசாங்கம் அனுப்பியுள்ளது.


கொரோனாவின் தாக்கத்திலேயே உலகம் கதிகலங்கியிருக்க, அதனுடன் கருப்பு பூஞ்சை என்ற அதிர்ச்சியும் மக்களை தாக்குகிறது. பல மாநிலங்களில் கருப்பு பூஞ்சை பாதிப்புகள் பதிவாகியுள்ளன.


Also Read | தமிழகத்தில் ஒரு வாரம் தளர்வுகளற்ற ஊரடங்கு: கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்


நோய் பரவலைக் கட்டுப்படுத்த பல மாநிலங்களும் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன. கொரோனா பரவலின் தொடக்க காலகட்டத்தில் மத்திய அரசு லாக்டவுனை அறிவித்தது. தற்போது, மாநிலங்கள் தங்கள் நிலைமைக்கு ஏற்றாற்போல ஊரடங்கையும் தளர்வுகளையும் நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு சொல்லிவிட்டது. 


தங்கள் மாநிலத்தின் COVID வழக்குகளின் நிலைமைகளுக்கு ஏற்ப மாநிலங்கள் லாக்டவுனை அறிவித்து வருகின்றன. தமிழகத்தில் ஊரடங்கு மே மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  


COVID-19 தடுப்பூசி இயக்கம் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் மும்முரமாக தொடர்கிறது. இதற்கிடையில், COVIDக்காக இந்தியாவுக்கு பிற நாடுகள் தொடர்ந்து உதவிகளை அனுப்பி வருகின்றன.


Also Read | Tamil Nadu Lockdown: தளர்வுகளற்ற ஊரடங்கு: தடைகளும் கட்டுப்பாடுகள்; இதற்கு அனுமதி 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR