Tamil Nadu Lockdown: தளர்வுகளற்ற ஊரடங்கு: தடைகளும் கட்டுப்பாடுகளும், அனுமதியும்

 தமிழகத்தில் மே 24 முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 23, 2021, 06:54 AM IST
  • தமிழகத்தில் மே 24 முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கு
  • காய்கறி கடைகள், மளிகை கடைகள் ஆகியவையும் இயங்காது
  • சரக்கு வாகனங்கள் செல்லவும், அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லவும் அனுமதி
Tamil Nadu Lockdown: தளர்வுகளற்ற ஊரடங்கு: தடைகளும் கட்டுப்பாடுகளும், அனுமதியும் title=

சென்னை: தமிழகத்தில் மே 24 முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா தொற்றின்தினசரி பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்துள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17 லட்சத்தை கடந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 16 ஆயிரத்தை கடந்துள்ளது.

நிலைமையை கருத்தில் கொண்டு, மருத்துவ நிபுணர்கள், அனைத்து கட்சி எம்.எல்.ஏ-க்களுடன் தமிழக முதல்வர் நடத்திய கலந்தாலோசனைக்கு பிறகு, மாநிலத்தில் 24ஆம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு தளர்வுகள் அற்ற லாக்டவுன் நீட்டிக்கப்பட்டது. 

Also Read | தமிழகத்தில் ஒரு வாரம் தளர்வுகளற்ற ஊரடங்கு: கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்

இயங்க அனுமதி கொடுக்கப்பட்டவை:

  1. மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள்
  2. பால் விநியோகம், குடிநீர் மற்றும் தினசரி பத்திரிக்கை விநியோகம்
  3. தலைமைச் செயலகத்திலும், மாவட்டங்களிலும், அத்தியாவசியத் துறைகள் மட்டும் இயங்கும்
  4. பெட்ரோல், டீசல் பங்க்குகள் வழக்கம் போல இயங்கும்
  5. ஏ.டி.எம். மற்றும் அது தொடர்பான சேவைகளுக்கு அனுமதி 
  6. செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கலாம்
  7. காலை 08.00 மணி முதல் மாலை 06.00 வரை மின்னணு சேவை இயங்கலாம்
  8. சரக்கு வாகனங்கள் செல்லவும், அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லவும் அனுமதி உண்டு
  9. உரிய மருத்துவக் காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்ட செல்ல இ-பதிவுடன் அனுமதி 
  10. மருத்துவக் காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை.

ALSO READ: தவிக்கும் தமிழகம்: 36,000-ஐத் தாண்டியது ஒரு நாள் தொற்று, 36,184 பேர் பாதிப்பு, 467 பேர் உயிர் இழப்பு!!

பொது மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், தோட்டக்கலைத் துறை மூலமாக சென்னை நகரத்திலும், அனைத்து மாவட்டங்களிலும் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து - வாகனங்கள் மூலமாக வழங்கப்படும். எனவே காய்கறி மற்றும் மளிகைக் கடைகள் இயங்காது.

வீட்டில் இருந்து பணிபுரியும் துறைகள்:

தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் இயங்க அனுமதி இல்லை. இந்த நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பிட்ட நேரம் மட்டுமே செயல்படும் கடைகள்:

  • உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதி.
  • ஸ்விக்கி, ஜொமோட்டோ மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களும் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதி 
  • வேளாண் விளை பொருட்கள் மற்றும் இடுபொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதி 
  • அத்தியாவசியப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி அனுமதிக்கப்படும்.

 செயல்பட அனுமதி இல்லாத துறைகள்:

  • மால்கள் திறக்க அனுமதி கிடையாது.
  • பொது நிகழ்ச்சிகள், சினிமா அரங்குகள் திறக்க அனுமதி கிடையாது
  • திருமணம், சடங்குகள், கோவில்கள், விழாக்கள் எதற்கும் அனுமதி கிடையாது

ALSO READ: முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை: ஊரடங்கை நீட்டிக்க கட்சிகள், நிபுணர்கள் பரிந்துரை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News