மீண்டும் எகிறும் கொரோனா எண்ணிக்கை, பாசிடிவ் விகிதம் 5% தாண்டியது
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா எண்ணிக்கை மக்களின் மனதில் மீண்டும் பீதியை உருவாக்கி வருகிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 461 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் டெல்லிவாசிகளின் கவலை மேலும் அதிகரித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் புதிய கோவிட் தொற்றுகள்: கடந்த பிப்ரவரி 20 அன்று, தலைநகர் டெல்லியில் 570 கொரோனா எண்ணிக்கை பதிவாகியுள்ளன. அதே சமயம் தற்போது கடந்த 24 மணி நேரத்தில், டெல்லியில் 461 புதிய கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளன, இது பிப்ரவரி 20 க்குப் பிறகு அதிகபட்சமானது ஆகும்.
இந்த நிலையில் தற்போது டெல்லியில் கொரோனா தொற்று விகிதம் 5 சதவீதத்தை தாண்டியுள்ளது. அதே சமயம் 2 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று விகிதம் 5.33% ஆக அதிகரித்துள்ளது, இந்த நோய்த்தொற்று விகிதம் ஜனவரி 31 க்குப் பிறகு மிக அதிகமாக உள்ளது. ஜனவரி 31 அன்று தொற்று விகிதம் 6.20% ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | Covid Variant XE: கொரோனாவின் புதிய வகை மாறுபாடு இந்தியாவில் அடி எடுத்து வைத்தது
எத்தனை பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது?
கடந்த 24 மணி நேரத்தில், 269 நோயாளிகள் குணமடைந்துள்ளனர் மற்றும் 8,646 பேர் பரிசோதிக்கப்பட்டனர் (கோவிட் டெஸ்ட்). டெல்லியில் மொத்தம் 1,262 கொரோனா பாதிப்புகள் உள்ளன. ஞாயிற்றுக்கிழமை தலைநகரில் 1,262 செயலில் உள்ள கொரோனா நோயாளிகள் உள்ளனர், இது மார்ச் 5 க்குப் பிறகு மிக உயர்ந்ததாகும்.
கொரோனா அபாயம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது
டெல்லி மக்கள் கவனமாக இருக்க வேண்டும். தற்போது இங்கு பாசிடிவ் விகிதம் 5% (5.33%) தாண்டியுள்ளது.
இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவின் நான்காவது அலை ஜூன்-ஜூலைக்குள் தாக்கக்கூடும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். எனவே, இதன் கருதில் கொண்டு பல்வேறு மானிலங்களில் கொரோனாவில் இருந்து பாதுகாக்க தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கொரோனா எக்ஸ்இ வகை தொற்றின் பொதுவான அறிகுறிகள்
- நரம்புத் தளர்ச்சி
- காய்ச்சல்
- ஹைபோக்ஸியா
- தூக்கம் அல்லது மயக்கத்தில் உளறுவது
- ப்ரைன் ஃபாக்
- மன குழப்பம்
- குரல் தண்டு நரம்பியல் பிரச்சனைகள்
- உயர் இதய துடிப்பு
- தோலில் கொப்பளங்கள் அல்லது நிறம் மாறுதல்
- வாசனை மற்றும் சுவை தெரியாமல் இருப்பது.
உங்களுக்கு தொடர்ந்து காய்ச்சல் மற்றும் இருமல் இருந்தால், உங்களுக்கு கோவிட் இருக்கலாம். ZOE கோவிட் டிராக்கர் செயலியின்படி இந்த புதிய அறிகுறிகள் பதிவாகியுள்ளன. இதில் நோயாளியின் கொரோனா அறிகுறிகள் பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று உங்களுக்கும் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Corona XE Variant: மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR