நாட்டில் கொரோனா பரவலை தடுக்க பல முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், கோவிட் -19 இன் XE மாறுபாடு  குறித்து பரபரப்பாக பேசப்படுகிறது. இந்நிலையில், நாட்டின் தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (NTAGI) தலைவர் டாக்டர் என்.கே. அரோரா நிம்மதி அளிக்கும் வகையிலான செய்தியை கூறியுள்ளார். இந்த கோவிட் மாறுபாடு குறித்து மக்கள் கவலைப்படத் தேவையில்லை என்று டாக்டர் அரோரா கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது போன்ற மாறுபாடுகள் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கும்: NTAGI தலைவர்


டாக்டர். என்.கே. அரோரா புதிய மாறு பாடு குறித்து கூறுகையில், கோவிட்-19 இன் ஓமிக்ரான் மாறுபாட்டைத் தொடர்ந்து, பல புதிய மாறுபாடுகள் தோன்றியுள்ளன. இதில் X தொடரின் மாறுபாடுகள் அடங்கும்.  லண்டனில் கண்டுபிடிக்கப்பட்ட XE திரிபு  குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை. இது கடுமையான சிக்கலை ஏற்படுத்தப் போவதில்லை. இப்போதும் இதுபோன்ற மாறுபாடுகள் தொடர்ந்து  வந்து கொண்டே தான் இருக்கும் என்றார்


பீதி அடைய  தேவையில்லை


புதிய மாறுபாடுஇப்போதைக்கு பீதி என்று எதுவும் இல்லை என்று டாக்டர் அரோரா கூறியுள்ளார். தற்போது கிடைத்த தரவுகளின்படி, இந்த மாறுபாடு இந்தியாவில் மிக வேகமாக பரவுவதாகத் தெரியவில்லை. கொரோனா வைரஸின் புதிய XE திரிபு  ஒமிக்ரானை விட 10 சதவிகிதம் அதிகமாக பரவுகிறது என WHO கூறுகிறது.


மேலும் படிக்க | அதிசயம் ஆனால் உண்மை! ‘இந்த’ நாடுகளில் நுழைய முடியாமல் கொரோனா தோற்று போனது!


இந்தியாவில் முதல் XE வகை தொற்று பாதிப்பு குஜராத்தில் கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக, மும்பையில் ஒரு பெண் இந்த வகை மாறுபாட்டால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது, ஆனால் அதனை மத்திய சுகாதார அமைச்சகம் நிராகரித்தது. ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக் V ஆகியவை கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு XE ம்ற்றும் ஒமிக்ரான் வகைக்கு எதிராக Sputnik Lite, Sputnik-V ஆகியவை சிறப்பாக செயல்புரிவதாக  ரஷ்ய நிறுவனம் கூறியுள்ளது. 


மேலும் படிக்க | Immunity Booster: நோய் எதிர்ப்பு சக்தி உணவு குறித்து நிபுணர்கள் கூறுவது என்ன!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR