அதிசயம் ஆனால் உண்மை! ‘இந்த’ நாடுகளில் நுழைய முடியாமல் கொரோனா தோற்று போனது!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்த வைரஸால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.  ஆனால், உலகில் கொரோனாவினால் ஒருவர் கூட இது வரை பாதிக்கப்படாத சில பகுதிகளும் உள்ளன என்பது ஆச்சர்யம் அளிக்கிறது இல்லையா...

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 22, 2022, 07:37 PM IST
அதிசயம் ஆனால் உண்மை!  ‘இந்த’ நாடுகளில் நுழைய முடியாமல் கொரோனா தோற்று போனது!  title=

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்த வைரஸால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.  ஆனால், உலகில் கொரோனாவினால் ஒருவர் கூட இது வரை பாதிக்கப்படாத சில பகுதிகளும் உள்ளன என்பது ஆச்சர்யம் அளிக்கிறது இல்லையா...

துர்க்மெனிஸ்தான்

மத்திய ஆசியாவில் உள்ள துர்க்மெனிஸ்தான், கொரோனாவை தனது நாட்டிற்கு  நுழைய அனுமதிக்கவில்லை. இதுவரை இந்த நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை. நாட்டில் கூட்டம் கூடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. இது தவிர, அனைவரும் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. மக்கள் இதை ஆரம்பத்திலிருந்தே பின்பற்றுகிறார்கள், அதன் விளைவாக இந்த நாடு கொரோனா  காலடி எடுத்து வைக்க முடியாத நாடாக உள்ளது

நியூ Niue

Niue தெற்கு பசிபிக் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவு நாடு. கொரோனாவை முறியடிப்பதிலும் வெற்றி பெற்றுள்ளது. இங்கு 79 சதவீத மக்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளனர் என WHO அறிக்கை கூறு. Niue தெற்கு பசிபிக் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவு நாடு.

மைக்ரோனேசியா
மேற்கு பசிபிக் பகுதியில் குடியேறிய மைக்ரோனேஷியா இன்னும் கொரோனாவிலிருந்து பாதுகாப்பாக உள்ளது. இந்த நாடு 4 தீவுகளின் கூட்டமாகும். கொரோனாவின் தொடக்கத்தில், அதன் எல்லைகளை மூடியது. இன்று WHO அதை கொரோனா இல்லாத நாடுகளின் பட்டியலில் சேர்த்துள்ளது.

மேலும் படிக்க | அகழ்வாராய்ச்சி: 5300 ஆண்டு பழமையான மண்டை ஓட்டின் மூலம் வெளியான அதிசய தகவல்!

நவ்ரு

நவ்ரு, ஆஸ்திரேலியாவுக்கு அருகில் அமைந்துள்ள ஒரு சிறிய நாடு. இந்த நாடு அதன் வெள்ளை மணல் கடற்கரைகளுக்கு பிரபலமானது. இது சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமானது என்றாலும், கொரோனா காரணமாக, அது உடனடியாக எல்லைகளை சீல் வைத்தது. இங்குள்ள மக்களில் 68 சதவீதம் பேர் தடுப்பூசி போடப்பட்டுள்ளனர். இந்த நாடு கொரோனாவை பரவ அனுமதிக்கவில்லை.

புனித ஹெலினா

தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள புனித ஹெலினா, உலகின் மிகத் தொலைதூரப் பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது ஆப்பிரிக்காவின் தென்மேற்கு கடற்கரையிலிருந்து 1200 மைல்கள் மற்றும் தலைநகர் ரியோவிலிருந்து 2500 மைல்கள் தொலைவில் உள்ளது. இங்கு மக்கள் தொகை 4500 மட்டுமே. இங்குள்ள மக்களில் 58 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இங்கு கொரோனாவால் காலடி எடுத்து வைக்க இயலவில்லை

பிட்காயின் தீவு 

பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிட்காயின் தீவு, முக்கியமாக நான்கு தீவுகளின் குழுவாகும். ஆனால் மற்ற மூன்றிற்கு பதிலாக, இந்த தீவு கொரோனா இல்லாததாக இருக்க முடிந்தது. இங்குள்ள மொத்த மக்கள் தொகை 50 மட்டுமே. இங்கு கொரோனாவால் காலடி எடுத்து வைக்க இயலவில்லை.

துவாலு தீவு

துவாலு தீவு தெற்கு பசிபிக் பகுதியில் அமைந்துள்ளது.   ஆரம்பத்திலிருந்தே, தனிமைப்படுத்தல் மற்றும் எல்லைகளைக் கடப்பது தொடர்பாக இங்கு கடுமையான விதிகள் உருவாக்கப்பட்டன, இதன் விளைவாக இந்த நாடு கொரோனா இல்லாதது நாடாலக உள்ளது

டோகெலாவ்

இன்றுவரை, தென் பசிபிக் பெருங்கடலுக்கு அருகில் அமைந்துள்ள டோகெலாவ்வில் ஒரு கொரோனா தொற்று பாதிப்பு கூட பதிவாகவில்லை. இந்த நாடும் கோவிட் இல்லாத நாடாக WHO அமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கே விமான நிலையம் இல்லை.  இந்த தீவு நாட்டிற்கு கப்பல் மூலம் மட்டுமே அடைய முடியும். இந்த நாட்டின் மக்கள் தொகை 1500 மட்டுமே என்று சொல்லலாம்.

மேலும் படிக்க | Primordial Apartments: 8500 ஆண்டு பழமையான வீடுகள் சொல்லும் கலாச்சாரம் இது யுஏஇ வீடு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News