உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,62,64,048 ஆக அதிகரித்தது. கொரோனா பாதிப்பினால் உலகளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,48,966 ஆக அதிகரித்துவிட்டது. கொரோனா பாதித்து, அதற்கு சிகிச்சை எடுத்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உலகளவில் 94,07,977 ஆக அதிகரித்துவிட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் இதுவரை மொத்தமாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,35,453 ஆகவும், குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 9,17,568 ஆகவும், பலி எண்ணிக்கை 32,771 ஆகவும் உயர்ந்துவிட்டது.


தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் நேற்று 6,993 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது... மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 2,20,716 ஆக அதிகரித்துவிட்டது!


தமிழகத்தில் நேற்று மேலும் 6,986 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,20,716 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,571 ஆக உயர்ந்துள்ளது.


சீனாவில் ஏப்ரல் 14 ஆம் தேதிக்குப் பிறகு கொரோனா நோய்த்தொற்றால் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று உச்சகட்டத்தை எட்டியது. ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று  (ஜூலை 27) ஒரே நாளில் மிகவும் அதிக அளவில் அதிகரித்திருந்தது.


வியட்நாமில் ஏப்ரலுக்குப் பிறகு முதன்முறையாக கொரோனா பாதிப்பு உறுதியானதால் தாநாங் நகருக்கு சுற்றுலாப் பயணிகள் வரத் தடை விதிக்கப்பட்டது.


மொராக்கோவில் நோய்த்தொற்று பரவல் உச்சத்தில் இருப்பதால், முக்கிய நகரங்களுக்கிடையே பயணம் செய்வதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.


வெளியே செல்லும்போது அபாயங்களைக் குறைக்கவும் COVID-19 பரவுவதைத் தடுக்கவும் அனைவரும் விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பிறரை சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதிகக் காற்றோட்டமுள்ள வெளிப்புற இடங்கள் அல்லது திறந்த நிலை இடங்களைத் தேர்வு செய்யவும். மற்றவர்களிடமிருந்து பாதுகாப்பான தூரத்தில் விலகி இருங்கள் வெளியே பொது இடங்களுக்குச் செல்வது பற்றிய உள்ளூர் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்


Read Also | COVID-19க்கு சித்த மருத்துவ சிகிச்சை மட்டுமே கொடுக்கும் ஆராய்ச்சி விரைவில் தொடங்கும்


கொரோனாவுக்கான தமிழக அரசின் பிரத்யேக தொலைபேசி உதவி எண்கள்: 1800 120 555550; 044 – 29510400, 044 – 29510500; 044 – 24300300, 044 – 46274446; 9444340496, 8754448477


கொரோனா நோய்த்தொற்று பாதிப்பின் அடிப்படையில் வெளியிடப்படும் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் முதல் பத்து நாடுகள்:


1. அமெரிக்கா - 42,33,923


2. பிரேசில் - 24,19,091


3. இந்தியா - 14,35,616


4. ரஷ்யா - 8,11,073


5. தென்னாப்பிரிக்கா - 4,45,433 


6. மெக்சிகோ - 3,90,516


7. பெரு - 3,75,961


8. சிலி - 3,45,790


9. இங்கிலாந்து - 3,01,020


10. இரான் - 2,91,172