கொரோனாவால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,64,95,309  ஆக அதிகரித்தது. இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,54,327ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 95,90,929 ஆக அதிகரித்துவிட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் இதுவரை மொத்தமாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,83,156 ஆகவும், குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 9,52,743 ஆகவும், பலி எண்ணிக்கை 33,425 ஆகவும் உயர்ந்துவிட்டது.


தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 6,972 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது... மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 2,27,688 ஆக அதிகரித்துவிட்டது!


தமிழகத்தில் நேற்று மேலும் 6,986 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,20,716 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,571 ஆக உயர்ந்துள்ளது.


அமெரிக்காவில் COVID-19 தடுப்பூசியின் இறுதிக்கட்ட சோதனை தொடங்கப்பட்டது...


ஜெர்மனியில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மண்டலங்களில் இருந்து வரும் பயணிகளை, கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது...


பெல்ஜியத்தில் நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து, சமூக விலகலுக்கான புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன...


வடகிழக்கு சீனாவில் பெய்ஜிங் உட்பட 9 நகரங்களில் புதிதாக COVID-19 நோய்த்தொற்றுப் பரவி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது...


வெளியே செல்லும்போது அபாயங்களைக் குறைக்கவும் COVID-19 பரவுவதைத் தடுக்கவும் அனைவரும் விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பிறரை சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதிகக் காற்றோட்டமுள்ள வெளிப்புற இடங்கள் அல்லது திறந்த நிலை இடங்களைத் தேர்வு செய்யவும். மற்றவர்களிடமிருந்து பாதுகாப்பான தூரத்தில் விலகி இருங்கள் வெளியே பொது இடங்களுக்குச் செல்வது பற்றிய உள்ளூர் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்


கொரோனாவுக்கான தமிழக அரசின் பிரத்யேக தொலைபேசி உதவி எண்கள்: 1800 120 555550; 044 – 29510400, 044 – 29510500; 044 – 24300300, 044 – 46274446; 9444340496, 8754448477


Read Also | COVID-19க்கு சித்த மருத்துவ சிகிச்சை மட்டுமே கொடுக்கும் ஆராய்ச்சி விரைவில் தொடங்கும்


கொரோனா நோய்த்தொற்று பாதிப்பின் அடிப்படையில் வெளியிடப்படும் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் முதல் பத்து நாடுகள்:


1. அமெரிக்கா - 42,90,259


2. பிரேசில் - 24,42,375


3. இந்தியா - 14,80,073


4. ரஷ்யா - 8,16,680


5. தென்னாப்பிரிக்கா - 4,45,433


6. மெக்சிகோ - 3,95,489


7. பெரு - 3,89,717


8. சிலி - 3,47,923


9. இங்கிலாந்து - 3,01,708


10. இரான் - 2,93,606


உலக சுகாதார அமைப்பு, நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையங்கள் மற்றும் உள்ளூர் சுகாதார அமைப்புகளிடமிருந்து COVID-19 பற்றிய தரவை JHU என்னும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்திலிருந்து இந்தத் தரவுகள் சேகரிக்கப்படுகின்றன.