Coronavirus death in India: நாட்டில் கொரோனா காரணமாக இதுவரை 38,972 பேர் இறந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 806 நோயாளிகள் உயிர் இழந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிராவில் 266 நோயாளிகள் மரணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் (Tamil nadu) ஒரே நாளில் 109 பேரும், கர்நாடகாவில் 98 பேர் இறந்துள்ளனர். ஆந்திராவில் 63 பேரும், மேற்கு வங்கத்தில் 53 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 48 பேரும் உயிரிழந்தனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,241 ஆக உயர்ந்துள்ளது. 


நாட்டில் கொரோனாவால் இறந்தவர்களின் (Corona Death) எண்ணிக்கை இப்போது 38 ஆயிரம் 972 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், பாதிக்கப்பட்ட 807 பேர் இறந்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 900 ஆக உயர்ந்துள்ளது. திங்களன்று இங்கு 14 பேர் உயிரிழந்தனர்.


ALSO READ | கொரோனாவை கொல்ல வெறும் தண்ணீர் போதுமா?.. ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு..!


இதற்கிடையில், இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் தமிழகத்தில் 109 பேர் இறந்து சாதனை படைத்துள்ளது. தமிழ்நாட்டில் இறப்பு எண்ணிக்கை இப்போது 4,241 ஐ எட்டியுள்ளது. 


கர்நாடகாவில் 98, ஆந்திராவில் 63, மேற்கு வங்காளத்தில் 53, உத்தரப்பிரதேசத்தில் 48, குஜராத்தில் 22, பஞ்சாபில் 19, டெல்லியில் 17, பீகாரில் 14, ராஜஸ்தானில் 13, ஒடிசாவில் 12, ஜம்மு காஷ்மீர் மற்றும் தெலுங்கானாவில் 11 பேர், ஜார்கண்ட் மற்றும் ஹரியானாவில் 7–7, அசாம், உத்தரகண்ட் மற்றும் கோவாவில் தலா 4 பேர், சத்தீஸ்கரில் 3 நோயாளிகள் இறந்தனர். இது தவிர, கேரளா மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் ஆகிய இடங்களில் தலா 2 என நோயாளிகள் உயிர் இழந்தனர்.


ALSO READ | தமிழகத்தில் சற்று சரிவை கண்டுள்ள கொரோனா பாதிப்பு! ஒரே நாளில் 109 பேர் பலி


நாட்டில் தொற்றுநோயால் எத்தனை இறப்புகள்-விவரம் கீழே..!!


மாநிலம் இறப்புகள்
மகாராஷ்டிரா 15,576
தமிழ்நாடு 4,132
டெல்லி 4,004
குஜராத் 2,482
கர்நாடகா 2,496
உத்தரபிரதேசம் 1,730
மேற்கு வங்கம் 1,678
ஆந்திரா 1,474
மத்தியப் பிரதேசம் 886
ராஜஸ்தான் 706
தெலுங்கானா 540
ஹரியானா 433
பஞ்சாப் 423
ஜம்மு காஷ்மீர் 396
பீகார் 322
ஒடிசா 236
உத்தரகாண்ட் 86
கேரளா 83
ஜார்க்கண்ட் 118
சத்தீஸ்கர் 58
அசாம் 105
இமாச்சலப் பிரதேசம் 13
சண்டிகர் 19
புதுச்சேரி 52
மேகாலயா 05
லடாக் 06
திரிபுரா 21
கோவா 53
அருணாச்சல பிரதேசம் 03
நாகாலாந்து 04
சிக்கிம் 01
மணிப்பூர் 07
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி 02
அந்தமான் மற்றும் நிக்கோபார் 08
மொத்தம் 38,972

தமிழகத்தில் இன்று மேலும் 5, 875 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,63,222 ஆக உயர்ந்துள்ளது,