இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் மொத்த எண்ணிக்கை 849553 ஆக உயர்வு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 28,637 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ள நிலையில், இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 8,49,553 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், செயலில் உள்ள வழக்குகள் 2,92,258 ஆகவும், கோவிட் -19 தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 22,674 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


நேர்மறையான குறிப்பில், கொரோனாவிலிருந்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,34,621 ஆக அதிகரித்துள்ளன. இந்தியாவில் மொத்த நோயிலிருந்து மீந்தவர்களின் விகிதம் இப்போது கிட்டத்தட்ட 63% ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 19,235 கோவிட் -19 நோயாளிகள் நோயிலிருந்து குணப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர். அதுமாடுமின்றி, கடந்த 24 மணி நேரத்திற்குள் சுமார் 19,000-க்கும் மேற்பட்ட மக்கள் குணப்படுத்தப்பட்டது தொடர்ந்து நான்காவது நாள் ஆகும்.


சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தரவுகளின்படி, திங்களன்று 2,80,151 சோதனைகள் நடத்தப்பட்டன. நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளில் பெரும்பாலானவை மகாராஷ்டிராவில் உள்ளன. மாநிலத்தில் பதிவான மொத்த வழக்குகளின் எண்ணிக்கை  2,54,427-யை எட்டியுள்ளது. இறப்பு எண்ணிக்கை 10,116 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 99,499 வழக்குகள் இன்னும் செயலில் உள்ளன, 1,36,985 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளன.


S. No. Name of State / UT Active Cases* Cured/Discharged/Migrated* Deaths** Total Confirmed cases*
1 Andaman and Nicobar Islands 70 93 0 163
2 Andhra Pradesh 12533 14393 309 27235
3 Arunachal Pradesh 214 125 2 341
4 Assam 6351 9150 35 15536
5 Bihar 4557 10685 131 15373
6 Chandigarh 135 413 7 555
7 Chhattisgarh 810 3070 17 3897
8 Dadra and Nagar Haveli and Daman and Diu 245 226 0 471
9 Delhi 19895 87692 3334 110921
10 Goa 928 1428 12 2368
11 Gujarat 10260 28649 2032 40941
12 Haryana 4891 15394 297 20582
13 Himachal Pradesh 263 908 11 1182
14 Jammu and Kashmir 4092 5895 169 10156
15 Jharkhand 1347 2243 23 3613
16 Karnataka 20887 14716 613 36216
17 Kerala 3446 3963 29 7438
18 Ladakh 148 928 1 1077
19 Madhya Pradesh 3878 12679 644 17201
20 Maharashtra 99499 136985 10116 246600
21 Manipur 750 843 0 1593
22 Meghalaya 139 66 2 207
23 Mizoram 77 150 0 227
24 Nagaland 435 313 0 748
25 Odisha 4105 8360 61 12526
26 Puducherry 629 690 18 1337
27 Punjab 2352 5040 195 7587
28 Rajasthan 5376 17869 503 23748
29 Sikkim 71 80 0 151
30 Tamil Nadu 46413 85915 1898 134226
31 Telangana 12135 20919 348 33402
32 Tripura 572 1375 2 1949
33 Uttarakhand 653 2718 46 3417
34 Uttar Pradesh 11490 22689 913 35092
35 West Bengal 9588 17959 906 28453
  Cases being reassigned to states 3024     3024
  Total# 292258 534621 22674 849553

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 1,34,226 ஆக உயர்ந்துள்ளன. மாநிலத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,898-யை எட்டியுள்ளது. மொத்தத்தில், செயலில் உள்ளவர்களின் எண்ணிக்கை 46,413 ஆக உள்ளது, இதுவரை குணப்படுத்தபட்டுள்ளவர்கள் 85,915 ஆக உயர்வு. 


READ | கொரோனா தடுப்பூசி: மனிதர்கள் மீதுதான சோதனையை வெற்றிகரமாக முடித்த முதல் நாடு!


தேசிய தலைநகரிலும் பாதிப்புகள் அதிகரித்துள்ளன, மொத்த கொரோனா வைரஸ் நேர்மறை பாதிப்புகள்கள் 1,10,921-யை எட்டியுள்ளன. டெல்லியில் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,334 ஆகவும், 87,692 பேர் இந்த நோயால் குணமடைந்துள்ளனர்.


தற்போது, கொரோனா வைரஸ் காரணமாக உலகில் மூன்றாவது மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடு இந்தியா. அமெரிக்காவில் 3 மில்லியனுக்கும் அதிகமான வழக்குகள் உள்ளன, அதிக எண்ணிக்கையிலான இரண்டாவது நாடான பிரேசில் மொத்தம் 1.75 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள மொத்த பாதிப்புகள் இப்போது 5,56,335 இறப்புகள் உட்பட 1.23 கோடிக்கு மேல் உள்ளன.