கொரோனா வைரஸ்: இந்தியாவில் 315,802 பேருக்கு தொற்று உறுதி; 2,102 பேர் பலி!
எந்தவொரு நாட்டு நாட்டிலும் வெறும் 24 மணி நேரத்தில் 300,000 தொற்று பாதிப்பு பதிவு செய்யப்படுவது இதுவே முதல் முறை. இந்த கொடிய தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 184,672 ஆக உள்ளது. நாட்டில் இப்போது கிட்டத்தட்ட 2.3 மில்லியன் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்: இன்றைய (வியாழக்கிழமை) அறிக்கையின் படி, நாட்டில் 315,802 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எந்தவொரு நாட்டு நாட்டிலும் வெறும் 24 மணி நேரத்தில் 300,000 தொற்று பாதிப்பு பதிவு செய்யப்படுவது இதுவே முதல் முறை. நாட்டில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை (Oxygen Shortage) மற்றும் நிலவிவரும் மோசமான சுகாதார செயல்பாடுகளுக்கு இடையே, இந்தியாவில் ஒரே நாளில் 2,102 இறப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த கொடிய தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 184,672 ஆக உள்ளது. நாட்டில் இப்போது கிட்டத்தட்ட 2.3 மில்லியன் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனா பாதிப்புகளின் உயர்வு இரண்டாவது அலைகளில் அதிவேகமானது. மகாராஷ்டிரா (Maharashtra) அரசு புதன்கிழமை இரவு, மாநிலத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் ஸ்பைக்கை எதிர்த்துப் போராடுவதற்கு "பிரேக் தி செயின்" (Break the Chain) என்ற தலைப்பில் தொடர்ச்சியான கட்டுப்பாடுகளை அறிவித்தது. இந்த விதிகள் இன்றிரவு முதல் மே 1 காலை 7 மணி வரை நடைமுறையில் இருக்கும். மகாராஷ்டிரா மாநிலத்தில் 67,468 புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகியுள்ளன. மேலும் 568 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் 24,638 புதிய தொற்றுநோய்கள் பதிவாகியுள்ளன. அங்கு 249 பேர் இறந்துள்ளனர்.
ALSO READ | 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி- மத்திய அரசு அறிவிப்பு!
ஆக்ஸிஜன் சப்ளை பற்றாக்குறை:
தேசிய தலைநகரில் உள்ள பல தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் சப்ளை குறைந்துள்ளதால், மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தை நேற்று பதிவு செய்தது டெல்லி உயர் நீதிமன்றம். மருத்துவமனைகளின் ஆக்ஸிஜனின் தேவையை பூர்த்தி செய்யுமாறு மத்திய அரசை கேட்டுக்கொண்டது.
மகாராஷ்டிராவின் நாசிக் மருத்துவமனையில் ஆக்சிஜன் வாயுக் கசிவு காரணமாக 24 பேர் உயிர் இழந்த சம்பவம் குறித்தும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினார்கள்.
நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள மொத்த கொரோனா எண்ணிக்கையில் மகாராஷ்டிரா (4,027,827), கேரளா (1,197,301), கர்நாடகா (1,109,650), தமிழ்நாடு (962,935), மற்றும் ஆந்திரா (942,135) ஆகிய ஐந்து மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள
உலக அளவில் கொரோனா பாதிப்பு:
உலகெங்கிலும் கொரோனா வைரஸ் (Coronavirus) பாதிப்பு தடையின்றி அதிகரித்து வருகிறது. இதுவரை 144,417,142 பேர் கொடிய தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 122,878,000 பேர் மீண்டு வந்த நிலையில், இதுவரை 3,070,865 பேர் இறந்துள்ளனர். 32,600,266 பேருடன் அமெரிக்கா மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடாக உள்ளது. இந்தியா, பிரேசில், பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் அடுத்தடுத்து இடங்களில் உள்ளன. இருப்பினும், கடந்த ஏழு நாட்களில், இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்று பாதிப்பு 1,737,683 ஆகவும், அமெரிக்காவில் 470,583 ஆகவும், பிரேசில் நாட்டில் 49,319 ஆகவும் உள்ளன.
ALSO READ | மகாராஷ்ட்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் வினியோகம் பாதிக்கப்பட்டதால் 22 நோயாளிகள் பலி!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR