18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி- மத்திய அரசு அறிவிப்பு!

மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

Written by - ZEE Bureau | Last Updated : Apr 19, 2021, 07:44 PM IST
18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி- மத்திய அரசு அறிவிப்பு!

கொரோனா வைரசின் இரண்டாவது அலை இந்தியாவை படுத்தி எடுத்து வருகிறது. தினசரி தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்க கொண்டிருக்கும் நிலையில், இறப்பு என்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருப்பது பீதியை கிளப்பியுள்ளது.

உலகெங்கிலும் உள்ள மொத்த கொரோனா பாதிப்பு (Coronavirus) எண்ணிக்கை 141 மில்லியனுக்கும் அதிகமாகவும், இறப்பு எண்ணிக்கை 3 மில்லியனுக்கும் அதிகமாகவும் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக, தினமும் இரண்டு லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு மாநிலங்கள் தடுப்பூசிகள் கேட்டும், படுக்கைகள் கேட்டும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன. மறுபுறம் தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 10,941 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், வருகிற மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) போடப்படும் என மத்திய அரசு (Central Government) அறிவித்துள்ளது. மேலும்கொரோனா பரவல் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ள நிலையில், வரும் மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ALSO READ | முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோன தொற்று உறுதி!

நோய்த்தொற்றின் அளவு (செயலில் உள்ள கோவிட் தொற்றுக்களின் எண்ணிக்கை) மற்றும் செயல்திறன் (நிர்வாகத்தின் வேகம்) ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய அரசு மாநிலங்கள் / யூ.டி.க்களுக்கு தடுப்பூசிகளை ஒதுக்கும். மேலும் மருந்து கடைகளிலும் கொரோனா தடுப்பூசி மருந்தை விற்பனை செய்யவும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. உற்பத்தியாகும் மருந்துகளில் 50 சதவிகிதத்தை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News