கொரோனா வைரஸ்: வுஹானிலிருந்து இந்தியர்களை மீட்க 2வது விமானம்- ஏர் இந்தியா
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து இந்தியர்களை வெளியேற்ற மற்றொரு விமானம் இன்று டெல்லியிலிருந்து புறப்பட உள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து இந்தியர்களை வெளியேற்ற மற்றொரு விமானம் இன்று டெல்லியிலிருந்து புறப்பட உள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகான் நகரில் வசித்து வரும் மக்களை கடந்த மாத இறுதியில் கொரோனா எனப்படும் கொடிய வைரஸ் தாக்கியது. இந்த வைரசால் புதுவித நிமோனியா நோய்க்கு ஆட்பட்ட அவர்கள் அடுத்தடுத்து ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் இந்த நோய் தீவிரமடைந்து உயிரிழப்புகள் ஏற்பட்டன.
இந்த வைரஸ் சீனாவின் பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசுக்கு இதுவரை மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லை. தலைநகர் பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், ஹுபெய்யை சுற்றியுள்ள மாகாணங்களிலும் பெருத்த சேதங்களை கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது வரை 259 பேர் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இறப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும். இதுவரை நாடு முழுவதும் 11791 பேர் பாதிக்கபட்டு உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
அதிகரித்து வரும் இறப்பு எண்ணிக்கை மற்றும் ஸ்கை ராக்கெட் வேகத்தில் பரவி பரவும் தொற்றுநோய்கள் காரணமாக அவசரகால நிலை 1 எச்சரிக்கை 31 மாகாணங்கள், தன்னாட்சி பகுதிகள் மற்றும் அதன் நிலப்பரப்பில் உள்ள நகராட்சிகளுக்கு விடுக்கப்பட்டு உள்ளது. அந்நாட்டின் தேசிய தலைநகர் பெய்ஜிங் சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது, மேலும் SARS நோய் பரவிய போது பயன்படுத்தப்பட்ட 17 ஆண்டு பழைய மருத்துவமனையை புதுப்பித்து வருகிறது.
இந்நிலையில் ஏர் இந்தியா சிறப்பு விமானம் வுஹானில் (சீனா) இருந்து 324 இந்தியர்களுடன் புறப்பட்டதாக ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் ஏ.என்.ஐ (ANI) ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். வுஹானில் சிக்கியுள்ள இந்தியர்கள் இரண்டு விமானம் மூலம் அழைத்து வர முடிவு செய்யப்பட்டது. அதன் முதல் பகுதியாக ஏர் இந்தியா சிறப்பு விமானத்தில் 324 இந்திய பயணிகள் புறப்பட்டு விட்டதாகவும், அந்த விமானம் காலை 7.30 மணிக்கு டெல்லியை அடையும் எனவும் ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தியா தனது குடிமக்களை சீனாவின் வுஹான் நகரத்திலிருந்து வெளியேற்றத் தயாராகி வருகிறது. அதன் ஒருபகுதியாக முதல் விமானம் வுஹானில் இருந்து இன்று காலை டெல்லி வந்தடைந்தது.
3 மைனர்கள் மற்றும் 211 மாணவர்கள் உட்பட 324 இந்தியர்கள் இன்று டெல்லி விமான நிலையத்தில் வுஹான் (சீனா) இலிருந்து ஏர் இந்தியா சிறப்பு விமானத்தில் வந்தனர், டெல்லியில் உள்ள இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் சாவ்லா முகாம் மற்றும் ஹரியானாவின் மானேசரில் உள்ள இந்திய ராணுவ முகாமுக்கு மருத்துவ கண்காணிப்புக்காக கொண்டு செல்லப்படுகிறார்கள்.
இந்நிலையில் தற்போது வுஹானில் இருந்து இந்தியர்களை வெளியேற்ற மற்றொரு விமானம் (னிக்கிழமை) இன்று மதியம் 12:50 மணிக்கு டெல்லி விமான நிலையத்திலிருந்து புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.