குரோதி ஆண்டு ஆனி மாதம் 17ம் நாள் திங்கட்கிழமை! ஜூலை மாதம் முதல் நாள் ராசிபலன்கள்!

Daily Rasipalan 2024 July 1 : 2024 ஜூலை முதல் நாளான இன்று, எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டமான நாள் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்... நவகிரகங்களின் இருப்பின் அடிப்படையில் கணிக்கப்பட்ட ராசிபலன்கள் இவை... 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 1, 2024, 06:02 AM IST
  • ஜூலை மாதம் முதல் நாளுக்கான ஜோதிட ராசிபலன்கள்
  • பரணி நட்சத்திர நாளுக்கான கணிப்பு
  • நன்றும் தீதும் பிறர் தர வாரா...
குரோதி ஆண்டு ஆனி மாதம் 17ம் நாள் திங்கட்கிழமை! ஜூலை மாதம் முதல் நாள் ராசிபலன்கள்! title=

ஜோதிடத்தின் அடிப்படையில் நமது செயல்களுக்கு ஏற்றவாறே நமது வாழ்க்கை அமைகிறது. அது எப்படி இருக்கும் என்பதை ஊகமாக கணிக்கும் கலை ஜோதிடம். ஜோதிட சாஸ்திரத்தின்படி, 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்களைத் தெரிந்துக் கொள்வோம்.

குரோதி ஆண்டின் ஆனி 17ம் நாள் தேய்பிறை சஷ்டி, பரணி நட்சத்திரம் கூடிய நாள் 01-07-2024

மேஷம் 

புதிய முயற்சிகள் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். குழந்தைகளால் எதிர்பாராத சில பண விரயங்கள் உண்டாகும். குடும்பத்தில் மற்றவர்களின் தலையீடுகளை குறைத்துக் கொள்ளவும். வியாபார பேச்சுவார்த்தைகளில் பொறுமையை கையாளவும். சூழ்நிலை அறிந்து செயல்படுவது நற்பெயரை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். 

ரிஷபம் 
நினைத்த பணிகளை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகும். கடன்களை வசூல் செய்யும்போது கவனமாக கையாளவும். குடும்ப உறுப்பினர்களால் அலைச்சல் ஏற்படும். ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். வித்தியாசமான செயல்களின் மூலம் பலரின் கவனத்தை ஈர்ப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத சில மாற்றங்கள் ஏற்படும்.  

மிதுனம் 
இலக்கை நோக்கிய சிந்தனைகள் அதிகரிக்கும். அனைவரின் ஒத்துழைப்பு கிடைக்கும். சமூகப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். பயணங்களின் மூலம் புதிய நம்பிக்கை ஏற்படும். சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் மனதில் பிறக்கும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் திறமைக்கான மதிப்பு கிடைக்கும்.  

கடகம்
எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. உறவினர்களின் வருகை உண்டாகும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். சமூகம் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். முயற்சிகளின் மூலம் மாற்றமான சூழல் அமையும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். பாடங்களில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். 

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி: 2025 வரை இந்த ராசிகளுக்கு அமோகமான பொற்காலம்.. வெற்றிகள் குவியும்!!

சிம்மம் 
விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் மறைமுக ஒத்துழைப்பு கிடைக்கும். சூழ்நிலை அறிந்து கருத்துகளை வெளிப்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் ஏற்படும். பிடிவாத போக்கை மாற்றிக் கொள்வது நன்மையை தரும். பூர்வீக பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும்.  

கன்னி 
வரவுக்கேற்ப செலவு உண்டாகும். மற்றவர்களின் பேச்சுக்களுக்கு செவிசாய்க்காமல் செயல்படவும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். வேலையாட்களிடத்தில் பொறுமையை கையாள்வது நல்லது. அலுவலகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். மறதியால் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். 

துலாம் 
காப்பீடு துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிலும் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். புதிய துறை சார்ந்த செய்திகள் கிடைக்கும். வெளியூர் வர்த்தக பணிகளில் லாபம் மேம்படும். இறைப்பணிகள் மூலம் மனதளவில் திருப்தி உண்டாகும். வியாபாரத்தில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் ஏற்படும்.  

விருச்சிகம் 
நண்பர்களிடத்தில் கலந்து ஆலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய யுத்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் மதிப்பு அதிகரிக்கும். எதிர்காலம் சார்ந்த சில முதலீடுகளை மேற்கொள்வீர்கள். தன வரவுகள் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களால் ஆதாயம் அடைவீர்கள். நினைத்த செயல்களை செய்து முடிப்பீர்கள்.  

மேலும் படிக்க | Astro: ஒரு தலைவனாகும் அனைத்து பண்புகளும் ‘இந்த’ ராசிகளுக்கு உண்டு... உங்க ராசி என்ன.!!

தனுசு 
வருமான உயர்வு குறித்த முயற்சிகள் மேம்படும். உடனிருப்பவர்களின் சுயரூபங்களை அறிவீர்கள். நண்பர்களின் வழியில் ஆதாயம் ஏற்படும். பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். மனதளவில் திருப்தி ஏற்படும். உத்தியோகத்தில் மதிப்பு அதிகரிக்கும்.  

மகரம்
உறவுகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் சாதகமாக அமையும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வழக்கு செயல்களில் சாதகமான சூழல் உண்டாகும். வாகன வசதிகள் மேம்படும். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை மறையும். 

கும்பம் 
குடும்பத்தாரின் ஆதரவு மேம்படும். வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். பூர்வீக சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் மாற்றமான செயல்களின் மூலம் லாபத்தை மேம்படுத்துவீர்கள். அதிகாரிகளிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். 

மீனம் 
நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவு பிறக்கும். சகோதரர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். அதிகாரிகளால் சில காரியங்கள் சாதகமாக முடியும். தடைகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். 

(பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | முக்கிய கிரக மாற்றங்களின் தாக்கத்தால் ஜூலை மாதம் இந்த ராசிகளுக்கு ஜாலியான ராஜவாழ்க்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News