)
Sukran Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரப்படி அனைத்து கிரகங்களுக்கும் ஒரு தனித்துவமான முக்கியத்துவம் உள்ளது. அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. இந்த கிரக பெயர்ச்சிகளின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றது. இதனால் சில ராசிகளில் நல்ல பலன்களும் சில ராசிகளில் பிரச்சனைகளும் ஏற்படும்.
கிரகங்களில் சுக்கிரன் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறார். இவர் மனித வாழ்வில் செழுமையை அளிப்பவர். உலக இன்பம், மகிழ்ச்சி, கலை, அழகு, தாம்பத்ய சுகம், பேச்சாற்றல் போன்றவற்றுக்குக் காரணி கிரகமாக இருப்பவர் அவர். சுக்கிரனின் ராசியில் மாற்றம் ஏற்படும்போதெல்லாம், மனித வாழ்வின் இந்த அம்சங்களில் தாக்கம் ஏற்படும்.
ஜூலை மாதத்தில் சுக்கிரன் 2 முறை தனது ராசியை மாற்றுவார். ஜூலை 7 ஆம் தேதி அவர் மிதுன ராசியிலிருந்து விலகி கடக ராசியில் பெயர்ச்சி ஆவார். அதன் பிறகு ஜூலை 31, 2024 புதன்கிழமை அன்று மதியம் 2:40 மணிக்கு அவர் கடக ராசியில் இருந்து விலகி சூரியனின் ராசியான சிம்ம ராசியில் பெயர்ச்சி ஆவார்.
சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். இவர்களது வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு முன்னேறும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.
ரிஷபம் (Taurus)
கடகத்தில் சுக்கிரன் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிக நன்மை பயக்கும். உங்கள் தொழில், வியாபாரம் மற்றும் வேலையில் மிகவும் சாதகமான தாக்கம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. செல்வம் பெருகும். எதிர்பாராத இடங்களிலிருந்து பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கல்வியுடன் தொடர்புடையவர்களின் வருமானமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் தரம் உயரும். வாழ்வில் ஆடம்பரப் பொருட்களும் சுகபோகங்களும் பெருகும். சொகுசு வாழ்க்கை வாழ்வீர்கள். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் விரும்பிய ஊருக்கு இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கையில் காதல் அதிகரிக்கும்.
விருச்சிகம் (Scorpio)
சிம்மத்தில் சுக்கிரன் பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். பண வரவு அதிகமாகும். இதனால் நிதி நெருக்கடி தீரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. பல வழிகளில் வருமானம் கிடைக்கும். வாழ்வில் சுபிட்சம் ஏற்படும். வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். மாணவர்களின் செயல்திட்டங்கள் பாராட்டப்பட்டு அவர்களின் தொழில் பலம் பெறும். சமூக மற்றும் குடும்ப உறவுகள் வலுப்பெறும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
மகரம் (Capricorn)
மகர ராசிக்காரர்களுக்கு கடக ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி அற்புதமான நற்பலன்களை அள்ளித் தரும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். புதிய வணிகத்தை தொடங்க இது நல்ல நேரமாக பார்க்கப்படுகின்றது. பொருளாதார நிலை முன்பை விட வலுவடையும் வாய்ப்பு அதிகம் உள்ளது. படிப்பு மற்றும் கற்பித்தல் தொடர்பான துறகளில் உள்ளவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். பணத்தை சேமிப்பதில் வெற்றி கிடைக்கும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ