Budget 2022: விமான பயணமா? இனி அதிகம் செலவாகும்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில், மாதத்தின் முதல் நாளிலேயே ஏடிஎஃப் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
புதுடெல்லி: Air travel Update: பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பே, விமான பயணிகள் பெரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர். அதன்படி இனி விமானத்தில் பயணம் செய்வது விலை உயர்ந்ததாகிவிடும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில், இந்த மாதத்தின் முதல் நாளில் ATF விலை உயர்த்தப்பட்டுள்ளது. விமான எரிபொருள் அதாவது ATF (Aviation Turbine Fuel) 8.5 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. ஏடிஎஃப் விலை கிலோலிட்டருக்கு ரூ.6743/கிலோ அதிகரித்துள்ளது.
அரசுக்கு சொந்தமான பெட்ரோலிய நிறுவனங்கள் அளித்த தகவலின்படி, டெல்லியில் ஏடிஎஃப் விலை கிலோ லிட்டர் ரூ.79,294.91ல் இருந்து ரூ.86308.16 ஆக உயர்ந்துள்ளது. ஜனவரி மாதத்திலும், ATF (Aviation Turbine Fuel) இன் விலை இரண்டு முறை உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | Union Budget 2022 Live: மத்திய பட்ஜெட் 2022 தாக்கல் தொடங்கியது
ஏடிஎஃப் விலையில் அதிரடி உயர்வு
முன்னதாக கடந்த ஜனவரி மாதத்தில் ATF விலை இரண்டு முறை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 1 ஆம் தேதி, விமான எரிபொருளின் விலை (Fuel Price) கிலோலிட்டருக்கு ரூ.2,039.63 அல்லது 2.75 சதவீதம் உயர்த்தப்பட்டு கிலோலிட்டருக்கு ரூ.76,062.04ஐ எட்டியது. அதேபோல் அதற்கு முன் டிசம்பரில், ATF விலைகள் இரண்டு முறை குறைக்கப்பட்டன.
நவம்பர் நடுப்பகுதியில் விமான எரிபொருளின் விலை அதிகபட்சமாக ஒரு கிலோ லிட்டர் ரூ.80,835.04 ஆக இருந்தது. அதே நேரத்தில், டிசம்பர் 15 அன்று, ATF விலைகள் கிலோ லிட்டருக்கு ரூ.6,812.25 அல்லது 8.4 சதவீதம் குறைக்கப்பட்டது. ஆனால், மீண்டும் ஏடிஎஃப் விலை அதிகரித்துள்ளது.
மாதத்திற்கு இரண்டு முறை விலைகள் திருத்தப்படும்
விமான எரிபொருளின் விலை மாதம் 1 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இரண்டு முறை மாற்றியமைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காலகட்டத்தில் சர்வதேச அளவில் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலையில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டுள்ளது. நவம்பர் 5, 2021 அன்று ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு 82.74 டாலராக இருந்தது. அதே நேரத்தில், டிசம்பர் 1 பீப்பாய்க்கு $ 68.87 ஆக குறைந்தது.
ALSO READ | Budget 2022 LIVE Streaming Online: பட்ஜெட் உரை எங்கே, எப்படி பார்ப்பது?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR