Budget 2022 News Live: நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. நேற்று தொடங்கிய இந்தக் கூட்டத் தொடர் பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெறும் .
இந்நிலையில், இந்த கூட்டத் தொடரின் 2 வது நாளான இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (FM Nirmala Sitharaman) 2022 - 2023 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை (Union Budget 2022) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். இது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 4 வது பட்ஜெட் ஆகும்.
இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.