புவி கண்காணிப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்டவைகளின் பயன்பாட்டிற்காக 2 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி-42 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்கிலாந்து நாட்டின் நிலப்பரப்பை ஆய்வு செய்யவும், புவி கண்காணிப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்டவைகளின் பயன்பாட்டிற்காக இரண்டு செயற்கைகோள்கள் பி.எஸ்.எல்.வி சி-42 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.  


ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து இன்றுசெயற்கைக் கோள்களை செலுத்துவதற்கான 32 மணி நேரம் 37 நிமிடங்களுக்கான கவுன்ட் டவுன் நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கியது. இதையடுத்து இன்று இரவு 10.07 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


நோவாசார் செயற்கைகோளானது காப்பு காடுகளின் அளவை கண்காணித்தல், புவி ஆய்வு, வெள்ளம் மற்றும் பேரிடர் கால கண்காணிப்பு, கப்பல், கடல்வழி போக்குவரத்தை கண்காணித்தல் ஆகிய பணிகளில் ஈடுபடும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.