காசி விஸ்வநாதர் கோயில், ஞானவபி மசூதியில் அகழ்வாராயச்சிக்கு நீதிமன்றம் அனுமதி
ஞானவபி மசூதியில் இந்திய தொல்பொருள் ஆய்வு (Archaeological Survey of India - ASI) மூலம் அகழ்வாராய்சி செய்து அங்கே காசி விஸ்வநாதர் ஆலயம் இருந்ததா இல்லையா என உறுதி செய்ய நீதிமன்றம் அனுமதி.
புதுடெல்லி: காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் ஞானவபி மசூதி வளாகம் குறித்த அகழ்வாராய்ச்சியை நடத்த இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்திற்கு (ASI) வியாழக்கிழமை (ஏப்ரல் 8) வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இந்த ஆராய்ச்சிக்கான செலவை உத்தரபிரதேச அரசு ஏற்கும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
ஞானவபி மசூதி இருக்கும் நிலத்தை இந்துக்களுக்கு மாற்றுமாறு கோரி வழக்கறிஞர் விஜய் சங்கர் ரஸ்தோகி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் விசாரித்த போது, இந்த தீர்ப்பை வழங்கியது.
காசி விஸ்வநாதர் கோயிலின் ஒரு பகுதியை இடித்த பின்னர் 1664 ஆம் ஆண்டில் முகலாய பேரரசர் அரங்கசீப்பால் இந்த மசூதி கட்டப்பட்டதாக மனுதாரர் கூறினார்.
முன்னதாக, நடைபெற்ற வழக்கில், காசி விஸ்வநாதர் கோயிலுக்கும், ஞான வாபி மசூதிக்கும் இடையிலான சர்ச்சையை விசாரித்த ஒரு வாரணாசி நீதிமன்றத்தில், 351 ஆண்டுகள் கால உண்மைகளை விவரிக்கும் சில வரலாற்று சிறப்பு மிக்க முக்கியமான பல ஆவணங்களை இந்து தரப்பினர் சமர்ப்பித்தனர்.
அதில், 1669 செப்டம்பர் 2 ஆம் தேதி, காசி விஸ்வநாதர் கோயில் இடிக்கப்பட்டது என்றும் அவுரங்கசீப்பின் உத்தரவு நிறைவேற்றப்பட்டது என்பதற்கான வரலாற்று ஆவணத்தை அவர்கள் சமர்பித்தனர்.
ALSO READ | காசி விஸ்வநாதர் ஆலயத்தின் மறைக்கப்பட்ட உண்மைகள்... வழக்கு விபரங்கள்..!!!
கியான்வாபி வளாகத்தை ஆய்வு செய்யக் கோரிய மனுவுக்கு எதிராக 2020 ஜனவரியில் அஞ்சுமான் இன்டெசாமியா மஸ்ஜித் குழு மனு தாக்கல் செய்திருந்தது.
தற்போது, நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, ஆய்வை நடத்த ஏ.எஸ்.ஐ ஒரு குழுவை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காசி விஸ்வநாதர் ஆலயத்தின் சுயம்பு ஜோதிர்லிங்கம் ஞான்வபி வளாகத்தில் இருப்பதாக இந்துக்கள் நம்புகிறார்கள். அதனால், அந்த வளாகத்தை அகழ்வாராய்ச்சி செய்ய விரும்புகிறார்கள். அதே நேரத்தில் முஸ்லிம்கள் அந்த இடத்தில் கோயில் இல்லை என மறுக்கின்றனர்.
ALSO READ | Wealth மாளா செல்வத்தை அளித்திடும் மகாலட்சுமி சக்கர ஸ்லோகம்!