வட இந்தியாவில், ஆனி மாதம் சிவனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் வட மாநிலத்தை சேர்ந்த லட்சக்கணக்கான சிவ பக்தர்கள் சிவனுக்காக காவடி யாத்திரையை மேற்கொள்ளும் பழக்கம் உள்ளது. ஆனால் கொரோனா வைரஸ், அதாவது கோவிட் -19 (COVOD-19) தொற்றுநோய் இத்தகைய ஆன்மீக நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது போன்ற முக்கியமான நேரத்தில், உத்தரபிரதேசத்தின்( Uttar pradesh) வாரணாசியில் (varanasi) உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் செல்ல முடியாத பக்தர்களுக்கு உதவுவதற்காக, இப்போது நாட்டின் எந்தப் பகுதிக்கும் பிரசாதத்தை வீட்டிற்கே அஞ்சல் துறை மூலம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ALSO READ | நம் சித்தர்கள் தந்த அற்புத யுக்தி..... கொரோனாவை துரத்தும் ஆற்றல் மிக்க சக்தி...!!!
கொரோனா (Corona) தொற்று நோயால், கடவுளை தரிசிக்க முடியாமல் மனம் வாடி இருக்கும் பக்தர்களுக்கு, இந்த முயற்சி ஆறுதலை அளிக்கும் என்பதால், பக்தர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
காசி விஸ்வநாதர் கோயில் (Kasi vishwanath temple) பிரசாதத்தை பக்தர்களின் வீட்டிற்கு அனுப்பும் தபால் துறையின் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது என மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். இப்போது, பக்தர்கள் எங்கிருந்தாலும், ஸ்பீட் போஸ்ட் மூலம் பிரசாதங்களைப் பெறலாம்.
பிரசாதத்தை பெற, எந்தவொரு தபால் நிலையத்திலிருந்தும் (Post Office) ரூ .251 மதிப்பிலான எலக்ட்ரானிக் மணீயார்டரை (EMO), வாரணாசி கிழக்கு பிரிவின் அஞ்சல் அலுவலகங்களின் மூத்த கண்காணிப்பாளருக்கு அனுப்ப வேண்டும்.
ALSO READ | உண்மையில் நமக்கு கொரோனா தடுப்பு மருந்து தேவையா... வல்லுநர்களின் கருத்து என்ன...
நேற்று, திங்கட்கிழமை சிவனுக்கு உகந்த நாள் என்பதால், சிவன் கோயில்களில் பகதர்கள் திரண்டு பிரார்த்தனை செய்வதை காண முடிந்தது. வாரணாசியிலும், பக்தர்கள் கோயிலில் திரண்டனர். ஆனால் தனி நபர் விலகலை பராமரிக்க கோயிலில் காவல்துறையினர் பணியில் இருந்தனர்.
இந்த முயற்சி, சிவ பக்தர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் என்பதோடு மட்டுமின்றி, இந்த முயற்சி தபால் துறை மேம்பாட்டிற்கும் வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.