COVAXIN: ஜூன் 1ம் தேதி முதல் 2-18 வயதினருக்கு தடுப்பூசி பரிசோதனை
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சீராம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும் பாரத்பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவேக்ஸின் ஆகியவற்றின் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, இதுவரை நாட்டில் 19.5 கோடிக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளுடன் இந்தியா போராடி வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சீராம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும் பாரத்பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவேக்ஸின் ஆகியவற்றின் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, இதுவரை நாட்டில் 19.5 கோடிக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாரத் பயோடெக் அதன் கோவிட் -19 தடுப்பூசி கோவாக்சின் குழந்தைகளுக்கு செலுத்திமேற்கொள்ளும் பரிசோதனைகள் ஜூன் ஒன்றாம் தேதி தொடங்க உள்ளது. குழந்தைகளுக்கு கோவாக்ஸின் செலுத்த மூன்றாவது அல்லது நான்காவது காலாண்டின் முடிவில் உலக சுகாதார அமைப்பின் (WHO) ஒப்புதல் கிடைக்கும் என நிறுவனம் எதிர்பார்க்கிறது என்று நிறுவனத்தின் வணிக மேம்பாடு பிரிவின் தலைவர் மற்றும் சர்வதேச வழக்கறிஞர் டாக்டர் ரேச்ஸ் எலா (Dr Raches Ella) கூறினார்.
ALSO READ | COVID-19: கருப்பு பூஞ்சையை அடுத்து பீதியை கிளப்பும் வெள்ளை பூஞ்சை
டாக்டர் ரேச்ஸ் எலா மேலும் கூறுகையில், "இந்த தடுப்பூசி பயணத்தில் இன்று நாம் இருக்கும் இடத்தில் எங்களால் நிற்க முடிவதற்கான முக்கிய காரணம் அரசின் ஆதரவு தான். , அரசாங்கத்தின் முழு ஆதரவும் கிடைத்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தடுப்பூசியை ICMR உடன் இணைந்து தயாரித்துள்ளோம். 1,500 கோடி ரூபாய் கொள்முதல் ஆணையை அரசு கொடுத்துள்ளது. இது எங்களுக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது. அதனால்தான் நாங்கள் பெங்களூரு மற்றும் குஜராத்தில் உற்பத்தியை விரிவுபடுத்துகிறோம்" என்றார்.
இந்த ஆண்டின் இறுதியில், கோவேக்ஸின் உற்பத்தி திறன், 70 கோடியாக அதிகரிக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், கோவிஷீல்ட், கோவேக்ஸின் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி மூன்றாவது தடுப்பூசியாக இப்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ALSO READ | கர்நாடகாவில் Covaxin தடுப்பூசி உற்பத்தி விரைவில்; வெளியானது முக்கிய தகவல்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR