புதுடெல்லி:  இந்தியாவில், கொரோனா தடுப்பூசிகளில், கோவேக்ஸின், கோவிஷீல்ட் மற்றும் ஸ்புனிக் வி ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், கோவேக்ஸின் (Covaxin) மற்றும் கோவிஷீல்ட்  (Covishield) தொடர்பான ஆராய்ச்சியில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களுக்கு கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு மருந்துகளும் வழங்கப்பட்டன. இதன் பின்னர் எந்த தடுப்பூசி எந்த அளவிற்கு திறம்பட செயல்படுகிறது என்ற ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. 


இந்த ஆய்வில் மொத்தம் 515 சுகாதார ஊழியர்கள் (305 ஆண்கள், 210 பெண்கள்) ஈடுபடுத்தப்பட்டனர். அவற்றில் 456 கோவிஷீல்ட் (Covishield)  தடுப்பூசியும்  96 பேருக்கு கோவாக்சின் (Covaxin ) தடுப்பூசியும் வழங்கப்பட்டன. ஒட்டுமொத்தமாக, 79.3 சதவிகிதம் பேருக்கு, முதல் டோஸுக்குப் பிறகு செரோபோசிட்டிவிட்டி (Seropositivity), அதாவது ஆண்டிபாடிகள் உருவாகின. கோவிஷீல்ட் எடுத்துக் கொண்டவர்களிடம், நோய் எதிர்ப்பு ஆன்டிபாடிகளின் சராசரி வீதம் அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.


பாரத் பயோடெக்கின் கோவேக்ஸினை விட சீரம் இன்ஸ்டிடியூட்டின் கோவிஷீல்ட் அதிக ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது என ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.


ALSO READ | மாம்பழம் சாப்பிட்ட பின் எடுத்துக் கொள்ளக் கூடாத 5 உணவுகள்


இரண்டு தடுப்பூசிகளிலும் நல்ல நோயெதிர்ப்பு சக்தி (Immune Response) 


கொரோனா வைரஸ் தடுப்பூசி மூலம் ஏற்படும் ஆன்டிபாடிகள் (Coronavirus Vaccine-induced Antibody) மீதான ஆராய்ச்சியில், கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டிலும்  சிறந்த நோயெதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது தெரிய வந்தது. ஆனால் செரோபோசிட்டிவிட்டி விகிதம், அதாவது ஆன்டிபாடிகள் உருவாவது, சராசரியாக கோவிஷீல்டில் அதிகமாக இருந்தன. அதாவது, கோவிஷீல்ட் கோவேக்ஸினை விட அதிக ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது.


முன்னதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தலைவர் டாக்டர் பால்ராம் பார்கவா, கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தயாரித்த ஆன்டிபாடிகள் குறித்து அதிர்ச்சியூட்டும் கருத்தை கூறினார். கோவிஷீல்ட்  தடுப்பூசியில், முதல் டோஸிலேயே அதிக ஆண்டிபாடிகள் உருவாகின்றன. ஆனால், கோவேக்ஸின் தடுப்பூசியில்  இரண்டாவது டோஸுக்கு பிறகே ஆண்டிபாடிகள் உருவாகின்றன என கூறியிருந்தார். 


தற்போதைய புதிய ஆய்வின்படி,கோவிஷீல்ட் கோவேக்ஸின் இரண்டிலும் ஆண்டிபாடிகள் உருவாகின்றன, ஆனால், கோவிஷீல்டை பொறுத்தவரை இதன் விகிதம் அதிகம் என தெரியவந்துள்ளது.


ALSO READ | Health Tips: கொத்தரவரங்காயை சாதாரணமாக எடை போட வேண்டாம், வியக்கத்தக்க நன்மைகள் உள்ளன


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR