புதுடெல்லி: கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்றுநோய் எண்ணிக்கையில், குறிப்பிடத்தக்க வார சரிவை இந்தியா பதிவு செய்துள்ளது. கடந்த வாரத்தில் சுமார் 3.6 லட்சம் பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இது மூன்று மாதங்களில் மிகக் குறைவான எண்ணிக்கையாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வாரம் அக்டோபர் 19 முதல் 25 வரை பதிவான புதிய நோய்த்தொற்றுகள் முந்தைய வாரத்தின் எண்ணிக்கையை விட கிட்டத்தட்ட 16 சதவீதம் குறைவாக இருந்தன. வைரஸால் இறந்தவர்கள் 19 சதவீதம் குறைந்துள்ளனர். ஜூலை மாதத்தில் 20-26 ஆம் தேதியிலான வாரத்தில், நாட்டில் சுமார் 3.2 லட்சம் பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டனர்.



முந்தைய வாரங்களின் எண்ணிக்கையிலிருந்து புதிதாக தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் 15.7 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. இது COVID -19 தொற்றுநோய் இந்தியாவைத் தாக்கியதில் இருந்து ஒரு வாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியில் மிகவும் கூர்மையான வீழ்ச்சியாகும். கடந்த வாரம் நாட்டில் கிட்டத்தட்ட 4.3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.


தொடர்ச்சியாக ஆறாவது வாரமாக, செப்டம்பர் 7-13 காலப்பகுதியில் அறிவிக்கப்பட்ட 6,45,014 நோய்த்தொற்றுகளின் உச்சத்திலிருந்து இந்தியா புதிய வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. இது நாட்டில் COVID -19 பரவல் குறைவதைக் காட்டுகிறது.


இந்தியாவில் COVID -19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 70 லட்சத்தை கடந்தது


இதற்கிடையில், COVID -19 க்கு எதிரான போராட்டத்தில் இந்தியா ஒரு முக்கிய மைல்கல்லைத் தாண்டியுள்ளது. 70 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இதுவரை இந்த நோயிலிருந்து மீண்டுள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW) தெரிவித்துள்ளது. இது COVID -19 இன் தேசிய மீட்பு வீதத்தில் உயர்வுக்கு வழிவகுத்தது. மீட்பு விகிதம் (Recovery Rate) 90 சதவீதத்தை எட்டியுள்ளது.


ALSO READ: ரஷ்யாவின் ஸ்பூட்னிக் V தடுப்பூசி 100 இந்திய தன்னார்வலர்களுக்கு செலுத்தப்டும்!!


மீட்கப்பட்ட மொத்த நோயாளிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள முதல் நான்கு மாநிலங்களில் உள்ளவர்கள். மேலும் நாட்டில் சிகிச்சைப் பெற்று வரும் 44 சதவீத நோயாளிகளும் இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


COVID -19 ல் இருந்து மீட்கப்பட்ட மொத்த நோயாளிகளில் 61 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய ஆறு மாநிலங்களில் சிகிச்சைப் பெற்று குணமடைந்தவர்கள் என்று சுகாதார அமைச்சகம் கூறியது. சுமார் 70,16,046 பேர் இந்த நோயிலிருந்து மீண்டு, தேசிய மீட்பு வீதத்தை 89.78 சதவீதமாக உயர்த்தியுள்ளனர் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.


 50,129 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்தியாவில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 78,64,811 ஆக உயர்ந்தது. மேலும் 578 பேர் வைரஸ் தொற்றால் இறந்ததால், இறப்பு எண்ணிக்கை 1,18,534 ஆக உயர்ந்தது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 6,68,154 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 70,78,123 பேர் குணமடைந்துள்ளனர். 


ALSO READ: Covaxin: மூன்றாம் கட்ட பரிசோதனை நடத்த பாரத் பயோடெக்கிற்கு DCGI அனுமதி


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR