இந்தியாவில் COVID-19 நவம்பர் நடுப்பகுதியில் உச்சத்தை அடையும் என தகவல்..!
இந்தியாவில் நவம்பர் மாதம் கொரோனா வைரஸ் உச்ச நிலையை அடையும் என வெளியிடப்பட்ட ஆய்வை தாங்கள் நடத்தவில்லை என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது...!
இந்தியாவில் நவம்பர் மாதம் கொரோனா வைரஸ் உச்ச நிலையை அடையும் என வெளியிடப்பட்ட ஆய்வை தாங்கள் நடத்தவில்லை என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது...!
நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், ‘’நவம்பர் மாதத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சம் தொடும்,’’ என்று ஐசிஎம்ஆர் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகி மக்களிடையே பெரும் பீதிய ஏற்படுத்தி வருகிறது. இதனால், ICU படுக்கைகள் மற்றும் வென்டிலேட்டர்கள் பற்றாக்குறை ஏற்படும் எனவும் அஞ்சப்படுகிறது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலால் (ICMR) அமைக்கப்பட்ட செயல்பாட்டு ஆராய்ச்சி குழு நடத்திய ஆய்வில், இந்தியாவில் நவம்பர் மாதம் மத்தியில் தான் கொரோனா வைரஸ் உச்சம் அடையும் என்று அதில் தெரியவந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதையடுத்து, இந்த செய்தி பல்வேறு ஊடகங்கள் மற்றும் நாளிதழ்களிலும் இது வெளியானது. இந்த தகவல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில்.... கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட 8 வார ஊரடங்கினால், பொது சுகாதார நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டன. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டும் காலம் சற்று தாமதமாகியுள்ளது. ஆதலால், நவம்பர் 2-வது வாரத்தில் இது உச்சத்தை எட்டுவதற்கான வாய்ப்பு உள்ளது. அப்போது நோயாளிகளை தனிமைப்படுத்துவதற்கு தேவையான தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள், வென்டிலேட்டர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும்.
பொதுவான ஊரடங்கு மருத்துவ வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை குறைக்க உதவியது. இதனால் 34 நாட்களில் உச்சத்தை எட்ட வேண்டிய பாதித்தோரின் எண்ணிக்கை 76 நாட்களாக தள்ளி போடப்பட்டுள்ளது. இதன் மூலம் தொற்றின் பாதிப்பு 97 % இருந்து 69 % ஆக குறைந்துள்ளது. ஊரடங்கிற்கு பின்பும் சுகாதாரத் துறை 60 % செயல்திறனுடன் இயங்கினால், நவம்பர் முதல் வாரம் வரை COVID-19 தடுப்புக்கு தேவைகளை சமாளிக்க முடியும். அதன் பிறகு, நவம்பர் 2 ஆவது வாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தை எட்டும் நிலையில், 5.4 மாதங்களுக்கு தனிமைப்படுத்துதலுக்கான படுக்கைகள், 4.6 மாதங்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள், 3.9 மாதங்களுக்கு வென்டிலேட்டர் உள்பட உயிர்காக்கும் கருவிகளுக்கு பற்றாக்குறை ஏற்படும்.
ஆனால் இந்த பற்றாக்குறை ஊரடங்கு, சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருந்தால், இருந்திருக்கும் நிலையைக் காட்டிலும், 83 சதவீதம் குறைவாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. நோய் தாக்கத்தின் வேறுபாட்டிற்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் தொடர் நடவடிக்கைகள் எடுத்தால், இந்த விளைவுகளை குறைக்க முடியும். பொது சுகாதாரத் துறையின் நடவடிக்கை 80 சதவீதம் அதிகரிக்கப்பட்டால், நோய் தொற்றின் பாதிப்பு குறைய வாய்ப்புள்ளது. ஊரடங்கின் போது, கொரோனா பரிசோதனை, சிகிச்சை முறை மற்றும் நோயாளிகளை தனிமைப்படுத்துதல் ஆகியவை அதிகரிக்கப்பட்டிருந்தால், நோய் தொற்று உச்சத்தில் இருக்கும் போது, பாதித்தோரின் எண்ணிக்கை 70 சதவீதம் அளவுக்கும் மொத்த பாதித்தோரின் எண்ணிக்கை சுமார் 27 சதவீதம் வரையிலும் குறைந்திருக்கும்.
READ | விவசாயிகள் தங்கள் உற்பத்தியை சர்வதேச சந்தையில் விற்க ஒரு எளிய வழி!
கொரோனாவால் பலியானர்வர்களின் எண்ணிக்கையை பொருத்தவரை, 60% உயிரிழப்புகள் தடுக்கப்பட்டிருக்கின்றன. மூன்றில் ஒரு பங்கு உயிரிழப்பு தீவிர சிகிச்சை பிரிவில் நடந்தவை. இருப்பினும், சோதனைகளை அதிகப்படுத்துதல், தனிமைப்படுத்தப்படுவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் தீவிர கண்காணிப்பை மேம்படுத்துதல் மூலம் மட்டுமே கொரோனாவிருந்து மீள முடியும்.
ஞாயிற்றுக்கிழமை இந்தியாவின் கோவிட் -19 தொற்றால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,20,922 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் சுமார் 11,929 வழக்குகள் பதிவாகியுள்ளன. இறப்பு எண்ணிக்கை 9,195 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், இந்த தகவலை ICMR மறுத்துள்ளது. இந்த ஆய்வுக்கு ஐசிஎம்ஆர் காரணம் என்ற செய்தி தவறானது என்றும், அப்படிப்பட்ட ஆய்வை ICMR மேற்கொள்ளவில்லை, அது ICMR-ன் அதிகாரப்பூர்வ அறிக்கை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.