விவசாயிகள் தங்கள் உற்பத்தியை சர்வதேச சந்தையில் விற்க ஒரு எளிய வழி!

இந்திய விவசாயிகள் வீட்டில் இருந்தபடியோ தங்கள் உற்பத்தி பொருட்களை சர்வதேச சந்தையில் விற்க முடியுமா?

Last Updated : Jun 14, 2020, 06:04 PM IST
விவசாயிகள் தங்கள் உற்பத்தியை சர்வதேச சந்தையில் விற்க ஒரு எளிய வழி! title=

இந்திய விவசாயிகள் வீட்டில் இருந்தபடியோ தங்கள் உற்பத்தி பொருட்களை சர்வதேச சந்தையில் விற்க முடியுமா?

இந்தியாவின் வடக்கு மாநிலமான பீகாரின் முசாபர்பூர் பகுதியை சேர்ந்த விவசாயி சுனில் குமார். இவருக்கு எந்தவித ஏற்றுமதி உரிமையும் இல்லை, ஆனாலும் இவரது 750 கிலோ விளச்சிப்பழம் லண்டனை அடைந்தது. இதேபோல், மற்றொரு விவசாயியின் 5 டன் விளச்சிப்பழம் ஜெர்மனிக்கு சென்றுள்ளது. மேலும், பல விவசாயிகளின் தங்களது விவசாய விளைப்பொருட்களை வெளிநாட்டு சந்தையில் விற்று வருகின்றனர்.

வேளாண் பொருட்களை விற்கும்போது விற்பனை கட்டணம் வசூலிக்க கூடாது: tnGovt...

இந்த நடைமுறையெல்லாம் எப்படி சாத்தியமானது. மத்திய அரசின் IT அமைச்சின் பொது சேவை மையம் (CSC) மூலமே இந்த நடைமுறைகள் சாத்தியமாகியுள்ளது. ஆம் இந்த நடைமுறையில் விவசாயிகள் தங்கள் உற்பத்தியை விற்க கிராமத்திற்கு வெளியே செல்ல வேண்டியதில்லை. பொருட்கள் விற்கப்பட்டவுடன், முழு விலை விவசாயியின் வங்கி கணக்கினை தேடி வருகிறது.
 
இதற்கு விவசாயிகள் செய்யவேண்டியது தங்கள் விவரங்களை CSC-யின் e-மார்ட் போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டியது தான். பதிவின் போது, ​​விவசாயிகள் தங்கள் தயாரிப்பு என்ன, அதன் அளவு என்ன, எந்த விலையில் விற்க விரும்புகிறார்கள் என்று குறிப்பிட வேண்டும். போர்ட்டலில், விவசாயிகள் தங்கள் நிலம் மற்றும் ஒரு விவசாயி என்பதற்கான பிற சான்றுகள் பற்றிய தகவல்களை வழங்க வேண்டும். வங்கிக் கணக்கு வைத்திருப்பது அவசியம். பான் கார்டு இல்லாவிட்டாலும் பதிவு செய்யப்படும். கிராம அளவிலான தொழில்முனைவோர் (VLE) விவசாயிகளுக்கு பதிவு செய்யும் பணியில் உதவுகிறார்கள். விவசாயிகள் சார்பாக விற்பனைக்கு முடிக்கப்பட்ட பொருட்களின் முழுமையான தகவல்களை வழங்கிய பின்னர், இந்த தகவல்கள் வர்த்தகர்கள் மற்றும் விவசாய ஏற்றுமதியாளர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்க 10,000 FPO-களுக்கு மத்திய அரசு ஒப்புதல்!...

இதுகுறித்து CSC தலைமை நிர்வாக அதிகாரி தினேஷ் தியாகி தனது அறிக்கையில் குறிப்பிடுகையில்., e-மார்ட் மேடையில் வர்த்தகர்கள் மற்றும் வேளாண் ஏற்றுமதியாளர்களும் உள்ளனர், ஆனால் அவர்கள் விவசாயியின் தயாரிப்பு மட்டுமே காட்டப்படுகிறார்கள், பின்னர் அவர்கள் ஏலம் விடுகிறார்கள். அந்த தயாரிப்புக்கு விவசாயி எந்த விலையை எதிர்பார்க்கிறார் என்பது வர்த்தகர்களுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் தெரியாது. புனேவைச் சேர்ந்த தக்காளி விவசாயி தத்தாத்ரேயா புட்பேட் தனது தக்காளியை ஒரு கிலோ ரூ.10-க்கு விற்க விரும்பியதற்கும், ஒரு கிலோவுக்கு ரூ.10.50 விலை கிடைத்ததற்கும் தியாகி குறிப்பிடுகிறார்.

Trending News