புதுடெல்லி:  கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கமும் பரவலும் அதிகரித்திருக்கும் நிலையில் புதிதாக பலருக்கு தொற்றுநோய் பரவியிருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில், கொரோனா வைரஸ் பாதிப்பினால் இறந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் மீண்டும் அதிகரித்துள்ளது. 4209 பேர் உயிர் இழந்துள்ளது கவலையளிக்கிறது.


கடந்த 24 மணிநேரத்தில், நாடு முழுவதும் 2 லட்சம் 59 ஆயிரம் 269 பேர் கொரோனா தொற்றுநோயால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


Also Read | 2DG Drug Test: தமிழகத்தில் 2DG பரிசோதனை முடிவுகள் என்ன சொல்கிறது?


தமிழகத்தில் கொரோனா நிலைமை குறித்து மாநில தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை நடத்துவார். மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அவர் கலந்தாலோசனை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.


Also Read | MiG-21 Accident: IAF போர் விமானம் பஞ்சாபில் விபத்துக்குள்ளானது


உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 16.58 கோடியாக உயர்ந்திருக்கிறது. கொரோனா பாதிப்பு தொடங்கியதில் இருந்து இன்றுவரை உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16.58 கோடி என்ற அளவைத் தாண்டி உள்ளது.  


உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து 143,804,287 பேர் மீண்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பினால் இதுவரை 34,44,303 பேர் உயிர் இழந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 14,65,15,004 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 15,875,990 ஆக உள்ளது.


Also Read | Madras High Court to Tamil Nadu: கொரோனா அரசாணைகளை. அரசு இணையதளத்தில் வெளியிடவும்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR