Madras High Court to Tamil Nadu: கொரோனா அரசாணைகளை. அரசு இணையதளத்தில் வெளியிடவும்!

கொரோனா தொடர்பான அனைத்து அரசாணைகளையும் அரசு இணையதளத்தில் வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 21, 2021, 07:43 AM IST
  • கொரோனா அரசாணைகளை. அரசு இணையதளத்தில் வெளியிடவும்!
  • ஸ்டாப் கொரோனா இணையதளத்தில் தமிழக அரசின் கொரோனா தொடர்பான அரசாணைகள், அறிவிப்புகள் வெளியிடப்படவேண்டும்
  • மெட்ராஸ் உயர் நீதிமன்றம் உத்தரவு
Madras High Court to Tamil Nadu: கொரோனா அரசாணைகளை. அரசு இணையதளத்தில் வெளியிடவும்! title=

சென்னை: கொரோனா தொடர்பான அனைத்து அரசாணைகளையும் அரசு இணையதளத்தில் வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கொரோனா வைரஸ் தொடர்பாக தமிழக அரசு வெளியிடும் அரசாணைகள், அறிவிக்கைகள், பத்திரிகை செய்திக் குறிப்புகள் 'ஸ்டாப் கொரோனா' என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. கொரோனா தொடர்பான அனைத்து அறிவிப்புகளையும், புள்ளிவிவரங்களையும் வெளியிட 'ஸ்டாப் கொரோனா' என்ற இணையதளம் பயன்படுத்தப்படுகிறது.

'ஸ்டாப் கொரோனா' இணையதளத்தில் அனைத்து அரசாணைகளும் வெளியிடப்படுவதில்லை என்று மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் இது தொடர்பாக மனு தாக்கல் செய்திருந்தார்.

Also Read | தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் குறைக்கப்பட்டது ஏன் தெரியுமா?
 
அதில் அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: “'ஸ்டாப் கொரோனா' என்ற இணையதளத்தில்  கொரோனா தொடர்பான அனைத்து அரசாணைகளும் வெளியிடப்படுவதில்லை. கொரோனா பாதிப்பு தொடங்கிய பிறகு 2021-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது இந்த இணையதளம். இதில் இந்த ஆண்டு மே 12-ம் தேதி வரை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை (Department of Revenue and Disaster Management) மூலம் கொரோனா தொடர்பாக 14 அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை 5 அரசாணைகள் மட்டுமே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “கடந்த ஆண்டு டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதியளித்த அரசாணை இதுவரை இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. கொரோனா தொடர்பான அறிவிப்புகள் மட்டுமல்லாமல் பிற அறிவிப்புகள், அரசாணைகளும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதில்லை. அதனால் கொரோனா தொடர்பான அறிவிப்புகள் மட்டுமல்லாமல் அனைத்து அரசாணைகள், அறிவிப்பாணைகள், பத்திரிகை செய்திக்குறிப்புகளை இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் eன நீதிமன்றம், அரசுக்கு உத்தரவிடுங்கள்”என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.
 
இந்த மனுவை நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய சட்ட அமர்வு விசாரித்தது. தமிழக அரசு வெளியிடும் அரசாணைகள், அறிவிப்பாணைகள் அனைத்தும் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுகிறதா? என்பது விளக்கமளிக்கும்படி தமிழக அரசுக்கு சட்ட அமர்வு உத்தரவிட்டது. 

Also Read | தமிழகத்தில் 35,000-ஐத் தாண்டியது ஒரு நாள் தொற்று பாதிப்பு, 397 பேர் உயிரிழப்பு

பிறகு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு இந்த மனுவை விசாரித்தது. கடந்த 18ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்ட கொரோனா தொடர்பான அனைத்து அரசாணைகள் மற்றும் அறிவிப்பாணைகள் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். 

மனுவை விசாரித்த அமர்வு, கொரோனா தொடர்பான அனைத்து அரசாணைகள், அறிவிப்பாணைகளை அரசின் இணையதளங்களிலும், 'ஸ்டாப் கொரோனா' இணையதளத்திலும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

Also Read | கருப்பு பூஞ்சை நோய் தொற்று நோயாக அறிவிப்பு: தமிழக அரசு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News