ஒரே நாளில் 96982 பேர் தொற்றால் பாதிப்பு: பீதியில் மக்கள், பதட்டத்தில் அரசாங்கங்கள்
செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 6, 2021) காலை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 96,982 பேர் கோவிட் -19 தொற்றுநோயால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி: செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 6, 2021) காலை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 96,982 பேர் கோவிட் -19 தொற்றுநோயால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் நாட்டில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 7.88 லட்சமாக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 446 பேர் இறந்த நிலையில் 50,143 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் இதுவரை COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1.26 கோடியாக (1,26,86,049) உயர்ந்துள்ளது. இதில் 1.17 கோடி பேர் (1,17,32,279) குணமடைந்துள்ளனர். 1.16 லட்சம் பேர் (1,65,547) இதுவரை வைரஸ் தொற்றால் இறந்துள்ளனர்.
இந்தியாவில், திங்களன்று, புதிதாக பாதிக்கப்பட்ட 96,982 பேரில் 47,288 பேர் மகாராஷ்டிராவில் மட்டும் பதிவாகியுள்ளனர். சத்தீஸ்கரில் புதிய ஒரு நாள் உச்சமாக 7,302 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். கர்நாடகாவில் ஒரு நாள் தொற்றின் பதிவு எண்ணிக்கை 5,000 ஐத் தாண்டியது. மகாராஷ்டிராவில் 164 பேரும் பஞ்சாபில் 72 பேரும் இறந்தனர்.
திங்களன்று 43 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி (Vaccine) போடப்பட்டது. இதுவரை மொத்தமாக கொரோனாவைரஸ் தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,31,10,926 ஆக அதிகரித்தது.
ALSO READ: சுகாதார, முன்னணி பணியாளர்களுக்கான கோவிட் தடுப்பூசி பதிவு ரத்து: அரசு அதிரடி அறிவிப்பு
இதற்கிடையில், மகாராஷ்டிராவில் வார இறுதிகளில் முழு லாக்டௌன் போடப்படும் என்றும் ஏப்ரல் வரை புதிய கோவிட் விதிமுறைகள் நீடிக்கும் என்றும் ஒரு நாள் முன்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை கூட்டப்பட்ட உயர்மட்ட மறுஆய்வுக் கூட்டத்தின் போது இதுபோன்ற திட்டங்கள் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாமல் மௌனம் காக்கப்பட்டது. எனினும், அதன் பிறகு தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கவே இந்த புதிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
வார இறுதியில் மட்டும் லாக்டௌன் போடப்படுவதால், பெரிதாக எந்த விளைவும் ஏற்படவில்லை என்றும், அதி தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு மகாராஷ்டிரா அரசுக்கு வலியுறுத்தியதால், மகாராஷ்டிரா அரசு கூடுதல் நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.
மகாராஷ்டிராவில் மட்டுமல்லாமல், இன்னும் பல மாநிலங்களிலும் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இம்முறை, இரண்டாம் அலையில், குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்ப்படுவதால், பல மாநிலங்களில் பள்ளிகள் கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஆன்லைன் கல்வி முறை மீண்டும் துவங்கியுள்ளது.
கொரோனா தொற்று (Coronavirus) இன்னும் நம்மிடையேதான் உள்ளது என்பதையும், நம்முடைய விழிப்புணர்வும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மட்டும்தான் அதை கட்டுப்படுத்த முடியும் என்பதையும் மக்கள் நன்றாக புரிந்து கொள்வது நல்லதாகும்.
ALSO READ: 24 மணி நேரத்தில் 93,000 பேருக்கு கொரோனா தொற்று: அவசர கூட்டத்தைக் கூட்டினார் பிரதமர் மோடி
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR