சுகாதார, முன்னணி பணியாளர்களுக்கான கோவிட் தடுப்பூசி பதிவு ரத்து: அரசு அதிரடி அறிவிப்பு

சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் சனிக்கிழமை (ஏப்ரல் 3, 2021) மாலை இந்தியா முழுவதும் போடப்பட்டுள்ள COVID-19 தடுப்பூசி அளவுகளின் மொத்த எண்ணிக்கை 7.44 கோடியைத் தாண்டியுள்ளதாக அறிவித்தது.  

Written by - ZEE Bureau | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 4, 2021, 09:44 AM IST
  • சுகாதார மற்றும் முன்னணி பணியாளர்களுக்கு இனி தடுப்பூசிக்கான பதிவு நடக்காது.
  • இதில் முறைகேடுகள் நடப்பதால் இந்த முடிவு-சுகாதார செயலர்.
  • சனிக்கிழமை இரவு 8 மணி வரை மொத்தம் 7,44,42,267 பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார, முன்னணி பணியாளர்களுக்கான கோவிட் தடுப்பூசி பதிவு ரத்து: அரசு அதிரடி அறிவிப்பு

புதுடெல்லி: கோவிட் -19 தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள சுகாதார மற்றும் முன்னணி தொழிலாளர்களுக்கு புதிய பதிவுகளை இனி அனுமதிக்க வேண்டாம் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது என பிடிஐ செய்தி தெரிவித்துள்ளது. இந்த பிரிவின் கீழ் தகுதிபெறாத சிலர், இதன் மூலம் பதிவு செய்ய முயற்சித்து, விதிகளை மீறுவதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

"சில கோவிட் -19 (COVID-19) தடுப்பூசி மையங்களில் (சி.வி.சி), தகுதிபெறாத சில பயனாளிகள் எச்.சி.டபிள்யூ மற்றும் எஃப்.எல்.டபிள்யூ என பதிவு செய்யப்பட்டு, பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களை முழுமையாக மீறி தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள் என்று பல்வேறு மூலங்களிலிருந்து பல்வேறு உள்ளீடுகள் பெறப்பட்டுள்ளன" என்று செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறியுள்ளதாக பி.டி.ஐ செய்தி வெளியிட்டது. 

அவர் மேலும் கூறுகையில், "இந்த பிரச்சினை இன்று NEGVAC கூட்டத்தில் மாநில பிரதிநிதிகள் மற்றும் கள அறிவு நிபுணர்களுடன் கலந்துரையாடப்பட்டது. மேலும் COVID-19 (NEGVAC) க்கான தடுப்பூசி நிர்வாகம் குறித்த தேசிய நிபுணர் குழுவின் பரிந்துரையின் படி, சுகாதார மற்றும் முன்னணி பணியாளர்களுக்கான புதிய தடுப்பூசி பதிவுகள் எதுவும் இனி வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது இது உடனடியாக அமல்படுத்தப்படும். 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களின் பதிவு கோவின் போர்ட்டலில் தொடர்ந்து அனுமதிக்கப்படும்." என்றார்.

ALSO READ: Shocking: புதிதாகப் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா தொற்று

இதற்கிடையில், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் சனிக்கிழமை (ஏப்ரல் 3, 2021) மாலை இந்தியா முழுவதும் போடப்பட்டுள்ள COVID-19 தடுப்பூசி (Vaccine) அளவுகளின் மொத்த எண்ணிக்கை 7.44 கோடியைத் தாண்டியுள்ளதாக அறிவித்தது.

தற்காலிக அறிக்கையின்படி சனிக்கிழமை இரவு 8 மணி வரை மொத்தம் 7,44,42,267 பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

"இவர்களில் முதல் டோஸ் போட்டுக்கொண்ட 89,53,552 சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்ட 53,06,671 சுகாதாரப் பணியாளர்கள், 96,19,289 முன்னணி பணியாளர்கள் (முதல் டோஸ்), 40,18,526 முன்னணி பணியாளர்கள் (இரண்டாவது டோஸ்), முதல் டோஸ் போட்டுக்கொண்ட 45 வயதிற்கு மேற்பட்ட 4,57,78,875 பேர், இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்ட 45 வயதிற்கு மேற்பட்ட 7,65,354 பேர் அடங்குவர்” MoHFW கூறியது.

2021 ஜனவரி 16 ஆம் தேதி நாடு தழுவிய COVID-19 தடுப்பூசி செயல்முறை தொடங்கப்பட்டது. முதன் முதலில் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. அதைத்  தொடர்ந்து பிப்ரவரி துவங்கிய இரண்டாவது கட்டத்தில் முன்னணிப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அடுத்த கட்ட COVID-19 தடுப்பூசி செயல்முறை மார்ச் 1 முதல் தொடங்கியது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், நாள்பட்ட நோயால் அவதிப்படும் 45 வயதுக்கு மெற்பட்டவர்களுக்கும் இதில் தடுப்பூசிகள் போடப்பட்டன. ஏபர்ல் 1 முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டு (Vaccination) வருகின்றன.

ALSO READ: மீண்டும் மீண்டும் தீண்டும் தொற்று: ஒரே நாளில் 81,000 பேருக்கு மேல் பாதிப்பு

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News