புதுடெல்லி: செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 13, 2021) காலை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக 1.60 லட்சத்துக்கும் அதிகமானோர் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,61,736 புதிய COVID-19 நோயாளிகள் பதிவாகியுள்ளனர். 97,168 பேர் குணமடைந்த நிலையில் 879 பேர் இறந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டின் மொத்த கொரோனா வைரஸ் (Coronavirus) எண்ணிக்கை இப்போது 1.36 கோடியாக உயர்ந்துள்ளது, அவற்றில் 12.6 லட்சம் பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இதுவரை மொத்தம் 1,22,53,697 பேர் குணமடைந்துள்ளனர், 71,058 பேர் வைரஸுக்கு பலியாகியுள்ளனர். 


முன்னதாக திங்களன்று இந்தியாவின் கோவிட் -19 கேசலோட் 1.68 லட்சம் அதிகரித்தது. COVID-19 தொற்றின் சமீபத்திய திடீர் எழுச்சியால், இந்தியா இப்போது உலகெங்கிலும் இரண்டாவது மிக மோசமான-கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நாடாக மாறியுள்ளது. இந்தியாவின் எண்ணிக்கை திங்களன்று பிரேசிலை பின்னுக்குத் தள்ளியது. இதுவரை 3,12,67,359 பேர் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக தற்போது இந்தியா உள்ளது. 


ALSO READ: Covidஐ அடியோடு விரட்ட 5 மருந்துகள் இன்னும் ஐந்து மாதத்தில்...


இதற்கிடையில், தடுப்பூசி (Vaccine) போடப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10.85 கோடியை எட்டியுள்ளது. இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் (DCGI), ஸ்பட்னிக் வி கோவிட் -19 தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்கு  ஒப்புதல் அளித்து ஒரு வாரம் ஆன நிலையில், தடுப்பூசிகளின் இந்த தரவு வெளிவந்துள்ளது. ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் (RDIF) இந்தியாவில் ஆண்டுக்கு 850 மில்லியனுக்கும் அதிகமான டோஸ்களை உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அறிவித்துள்ளது.


"உலகம் முழுவதும் 425 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு, இந்தியாவில் ஆண்டுதோறும் 850 மில்லியனுக்கும் அதிகமான டோஸ் ஸ்பூட்னிக் வி தயாரிக்கப்பட உள்ளது" என்று RDIF தலைமை நிர்வாக அதிகாரி கிரில் டிமிட்ரிவ் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.


ஸ்பூட்னிக் வி (Sputnik V), குறிப்பாக, இந்தியாவின் ஒழுங்குமுறை அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்ட மூன்று கொரோனா வைரஸ் தடுப்பூசிகளில் ஒன்றாகும்.


ஸ்பூட்னிக் V ஐ அங்கீகரிக்கும் 60 வது நாடாக இந்தியா மாறிவிட்டது என்றும் ரஷ்ய தடுப்பூசியை பதிவு செய்யும் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா என்றும் RDIF தெரிவித்துள்ளது.


ALSO READ: சமூக இடைவெளி இல்லை, சென்னை காசிமேடு துறைமுகத்தில் குவியும் மீன்பிரியர்கள்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR