புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,457 புதிய கோவிட் -19 தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை (ஆகஸ்ட் 21, 2021) தெரிவித்துள்ளது. நாடு கடந்த 24 மணி நேரத்தில் 36,347  பேர் குணனடைந்துள்ளதை அடுத்து, கொரோனா தொற்றில் இருந்து குணம்டைந்தவர்களின் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையை 3,15,97, 982 ஆக அதிகரித்துள்ளது. கூடுதலாக, சனிக்கிழமையன்று நாடு 375  கொரோனாவினால் பலியானதாக பதிவாகியுள்ளதை அடுத்து, இறப்பு எண்ணிக்கை 4,33,964 ஆக உயர்ந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா (Corona Virus) சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 3,61,340 ஆக குறைந்துள்ளது, இது 151 நாட்களில் மிகக் குறைவான அளவாகும். குணமடையும் விகிதம் 97.54 சதவீதமாக உள்ளது. இது மார்ச் 2020 க்குப் பிறகு பதிவான அதிகபட்ச அளவு என்பது குறிப்பிடத்தக்கது. தினசரி நேர்மறை விகிதம், அதாவது தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்பவர்களில், தொற்று உறுதியானர்களின் எண்ணிக்கை,  2 சதவிகிதம் என்ற அளவில் உள்ளது. வாராந்திர நேர்மறை விகிதம் கடந்த 57 நாட்களில் 3 சதவிகிதத்திற்கும் குறைவான அளவில் 1.98 சதவிகிதம்  என்ற அளவில் இருப்பதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


ALSO READ: WHO: இந்தியாவில் போலி கொரோனா தடுப்பூசிகள் அதிகரித்துவிட்டது; உலக சுகாதார மையம் எச்சரிக்கை
கடந்த 24 மணி நேரத்தில், முந்தைய எண்ணிக்கையை ஒப்பிடும் போது, தொற்று பாதிப்பிற்காக சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 2,265 என்ற அளவிற்கு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது, 


மேலும், வெள்ளிக்கிழமை, நாட்டில், 17,21,205 பேருக்கு COVID-19 பரிசோதனைகள்  நடத்தப்பட்டன, நாட்டில் இதுவரை செய்யப்பட்ட மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 50,45,76,158 ஆக உள்ளது. நோயிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,15,97,982 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் இறப்பு விகிதம் 1.34 சதவீதமாக உள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன. இதுவரை, நாடு தழுவிய அளவில் மேற்கொள்ளப்படும் தடுப்பூசி போடும் பணியின் கீழ் 57.61 கோடி கோவிட் -19 தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.


இதற்கிடையில், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) அதன் வரவிருக்கும் கோவிட் -19 தடுப்பூசி கோவோவாக்ஸிற்காக (Covovax) உலக சுகாதார அமைப்பின் (WHO)  தடுப்பூசியின் அவசர பயன்பாட்டு பட்டியலில் (EUL) சேர்க்க விண்ணப்பித்துள்ளது என்று நெருங்கிய வட்டாரங்கள் ஜீ மீடியாவிடம் தெரிவித்தன. புனேவைச் சேர்ந்த மருந்து நிறுவனத்தின் விண்ணப்பத்தை உலக சுகாதார அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்றும் WHO இடையே ஆகஸ்ட் 10-ம் தேதி  உது தொடர்பாக கூட்டம் நடத்தப்பட்டதாகவும் அந்த நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.


ALSO READ: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR