Covid 19 Update: கடந்த 24 மணி நேரத்தில் 1,41,986 பேர் பாதிப்பு, 285 பேர் உயிரிழப்பு
சில மாதங்களுக்கு முன்னர் தொற்று அளவு குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பத் தொடங்கிய நிலையில், தற்போது மீண்டும் இது தலைதூக்கத் தொடங்கியுள்ளது.
புதுடெல்லி: கொரோனா பெருந்தொற்று உலக மக்களை ஆட்கொண்டு சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. அது இன்னும் நம்மை விட்டு முழுமையாக விலகவில்லை. மாறாக, தனது பல்வேறு மாறுபாடுகளால் மாறி மாறி மக்களை அச்சுறுத்தி வருகிறது.
சில மாதங்களுக்கு முன்னர் தொற்று அளவு குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பத் தொடங்கிய நிலையில், தற்போது மீண்டும் இது தலைதூக்கத் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,41,986 பேருக்கு புதிதாக கோவிட்-19 (COVID-19) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 285 பேர் இறந்தனர். இதனுடன் மொத்த இறப்பு எண்ணிக்கை 4,83,463 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை (ஜனவரி 8, 2022) வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 4,72,169 ஆக உள்ளது.
சிகிச்சையில் உள்ளவர்களின் கோவிட்-19 கேஸ்லோடில் 24 மணிநேரத்தில் 1,00,806 தொற்றுகள் அதிகரித்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 40,895 பேர் குணமடைந்துள்ளனர், மொத்த மீட்பு எண்ணிக்கை 3,44,12,740 ஆக உள்ளது.
ALSO READ | Omicron: அறிகுறிகள் என்ன? எவ்வளவு நாட்களில் தெரியும்? முக்கிய தகவல்கள் இதோ
நேற்று, இந்தியாவில் 64 புதிய ஓமிக்ரான் (Omicron) நோய்த்தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது நாட்டில் மொத்த ஓமிக்ரான் தொற்று எண்ணிக்கையை 3,071 ஆக உயர்த்தியுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. குறைந்தது 1,203 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 876, டெல்லியில் 513, கர்நாடகாவில் 333, ராஜஸ்தானில் 291, கேரளாவில் 284 மற்றும் குஜராத்தில் 204 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், ஹரியானா, மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், ஒடிசா, உத்தரகாண்ட், சண்டிகர், ஜம்மு-காஷ்மீர், உத்தரப் பிரதேசம், கோவா, ஹிமாச்சலப் பிரதேசம், லடாக், மணிப்பூர் மற்றும் பஞ்சாப் என மொத்தம் 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புதிய மாறுபாட்டால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ALSO READ | Omicron: அறிகுறிகள் என்ன? எவ்வளவு நாட்களில் தெரியும்? முக்கிய தகவல்கள் இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR