24 மணி நேரத்தில் 93,000 பேருக்கு கொரோனா தொற்று: அவசர கூட்டத்தைக் கூட்டினார் பிரதமர் மோடி
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 93,249 பேர் COVID-19 தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டதாகவும், 60,048 பேர் குணமடைந்ததாகவும், 513 பேர் இறந்ததாகவும் சுகாதாரத் துறை தரவுகள் தெரிவிக்கின்றன.
புதுடெல்லி: மத்திய சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 4, 2021) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 93,000 க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 93,249 பேர் COVID-19 தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டதாகவும், 60,048 பேர் குணமடைந்ததாகவும், 513 பேர் இறந்ததாகவும் சுகாதாரத் துறை தரவுகள் தெரிவிக்கின்றன. இதனுடன், நாட்டின் மொத்த கொரோனா வைரஸ் கேஸ்லோட் 1.24 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் 6.91 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். நாட்டில் இதுவரை மொத்தம் 1.16 கோடி பேர் தொற்றிலிருந்து குணமடைந்தனர், 1.64 லட்சம் பேர் தொற்றின் காரணமாக இறந்துள்ளனர்.
ஆதாரங்களின்படி, நாட்டில் கோவிட் -19 தொடர்பான பிரச்சினைகள் மற்றும் தடுப்பூசி செயல்முறை குறித்து ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி இப்போது ஒரு உயர் மட்டக் கூட்டத்தை கூடியுள்ளார். "அமைச்சரவை செயலாளர், பிரதமரின் முதன்மை செயலாளர், சுகாதார செயலாளர், டாக்டர் வினோத் பால் உள்ளிட்ட அனைத்து மூத்த அதிகாரிகளும் இதில் பங்கேற்கின்றனர்" என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
மகாராஷ்டிரா (Maharashtra), கர்நாடகா, சத்தீஸ்கர், டெல்லி, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் தினசரி கோவிட் -19 தொற்றுநோயின் எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் மட்டும் 49,447 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நாட்டின் மொத்த எண்ணிக்கையில் ஒரு பெரும் பங்காகும். இதைத் தொடர்ந்து கர்நாடகாவில் 4,991 பேரும் சத்தீஸ்கரில் 4,174 பேரும் தொற்றால் பாதிகப்பட்டுள்ளனர்.
ALSO READ: சுகாதார, முன்னணி பணியாளர்களுக்கான கோவிட் தடுப்பூசி பதிவு ரத்து: அரசு அதிரடி அறிவிப்பு
முன்னதாக வெள்ளிக்கிழமை, அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா ஒரு உயர்மட்ட மறுஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். மேலும் சிகிச்சையில் உள்ளவர்கள் இறப்புகளின் விகிதத்தைக் கட்டுப்படுத்துவதை உறுதி செய்ய உடனடி மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவுறுத்தினார். சோதனை, கண்டிப்பான கட்டுப்பாடு, உடனடி தொடர்பு தடமறிதல் மற்றும் COVID-க்கு பொருத்தமான நடத்தை ஆகியவற்றை செயல்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.
"COVID-19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கான பொது சுகாதார நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ நிர்வாகத்திற்கான அனைத்து வளங்களையும் ஆதரவையும் மத்திய அரசு தொடர்ந்து வழங்கும் என்று வலியுறுத்தப்பட்டது," என்று MoHFW ஒரு செய்திக்குறிப்பில் கூறியது.
இதற்கிடையில், உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, இந்தியா முழுவதும் அளிக்கப்பட்டுள்ள COVID-19 தடுப்பூசி (Vaccination) டோஸ்களின் எண்ணிக்கை 7.59 கோடியைத் தாண்டியுள்ளது.
ALSO READ: Shocking: புதிதாகப் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா தொற்று
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR