புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.57 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் நாட்டில் மொத்த தொற்று எண்ணிக்கை 2 கோடியை எட்டியுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல்கள் செவ்வாய்க்கிழமை (மே 4, 2021) தெரிவித்தன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகளவில் கொரோனா தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.  13 ஆவது நாளாக, தொடர்ச்சியாக இந்தியாவில் 3,00,000 க்கும் மேற்பட்டோர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 


கடந்த 24 மணி நேரத்தில் 3,57,229 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 3,20,289 பேர் குணமடைந்துள்ள நிலையில் 3,449 பேர் இறந்தனர். 


கொரோனா வைரஸின் (Coronavirus) இரண்டாவது அலையால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவில் இப்போது மொத்தமாக 2,02,82,833 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 


1,66,13,292 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். COVID-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு 2,22,408 பேர் இறந்தனர்.  கடந்த இரண்டு வாரங்களில் இந்தியாவில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை தீவிரமாக அதிகரித்து வருகிறது. தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 34,47,133 ஆக உள்ளது. 


ALSO READ: மே 6 முதல் தமிழகத்தில் புதிய கோவிட் கட்டுப்பாடுகள்: எதற்கு அனுமதி உண்டு? எதற்கு இல்லை?


கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட இறப்புகளில் பெரும்பான்மையானவை மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பத்து மாநிலங்களில் ஏற்பட்டுள்ளன என்பது குறுப்பிடத்தக்கது.


மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, உத்தரப்பிரதேசம், டெல்லி, தமிழ்நாடு (Tamil Nadu), மேற்கு வங்கம், ஆந்திரா, ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட பத்து மாநிலங்களில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 


இந்தியாவின் மொத்த தொற்று எண்ணிக்கையில் மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், கேரளா, ராஜஸ்தான், குஜராத், ஆந்திரா, சத்தீஸ்கர், தமிழ்நாடு, மேற்கு வங்கம், பீகார் மற்றும் ஹரியானா ஆகிய 12 மாநிலங்களில் பெரும்பாலானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 


ALSO READ: இந்தியா ஜூலை வரை கோவிட் -19 தடுப்பூசி பற்றாக்குறையை எதிர்கொள்ளலாம்: SII


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR