இந்தியா ஜூலை வரை கோவிட் -19 தடுப்பூசி பற்றாக்குறையை எதிர்கொள்ளலாம்: SII

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 3,68,147 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. திங்களன்று (மே 3, 2021) பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,99,25,604 ஆக உயர்ந்துள்ளது.

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : May 3, 2021, 02:56 PM IST
  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 3,68,147 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
  • திங்களன்று (மே 3, 2021) பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,99,25,604 ஆக உயர்ந்துள்ளது.
  • மே 1 ஆம் தேதி நாடு முழுவதிலும் மூன்றாவது தடுப்பூசி போடு பணி தொடங்கியது.
இந்தியா ஜூலை வரை கோவிட் -19 தடுப்பூசி பற்றாக்குறையை எதிர்கொள்ளலாம்: SII

இந்தியா தற்போது கொடிய கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளை எதிர்த்துப் போராடுகிறது. 3 லட்சத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகின்றன. 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 3,68,147 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. திங்களன்று (மே 3, 2021) பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,99,25,604 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே தீர்வாக உள்ளது எனக் கூறலாம்.

கொரோனா வைரஸுக்கான (Corona Virus) கோவிஷீல்ட் (Covishield) தடுப்பு மருந்தை தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII), பிற நாடுகளில் தடுப்பூசி உற்பத்தியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக நேற்று செய்தி வெளியானது. தடுப்பூசிக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், அதன் சப்ளையை அதிகரிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

ALSO READ | கொரோனா நோயாளிகள் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவும் Prone Positioning

இந்நிலையில், இந்தியா ஜூலை வரை கோவிட் -19 தடுப்பூசி பற்றாக்குறையை எதிர்கொள்ளும் என்று SII தலைவர் ஆதர் பூனவல்லா தெரிவித்துள்ளார்.

நாட்டில் COVID-19 நோய்த்தொற்று பாதிப்புகள் பெருமளவில் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் தடுப்பூசி பற்றாக்குறை பிரச்சினை சில மாதங்களுக்கு நீடிக்கும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) தலைவர் ஆதர் பூனவல்லா தெரிவித்தார்.

மே 1 ஆம் தேதி நாடு முழுவதிலும் மூன்றாவது தடுப்பூசி போடு பணி தொடங்கிய சில நாட்களுக்குப் பிறகு SII தலைவரின் அறிக்கை வெளியாகியுள்ளது. மூன்றாம் கட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் COVID-19 தடுப்பூசி போடப்படும் என அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக, சீரம் இன்ஸ்டிடியூட்டின் உற்பத்தித் திறனை ஆறு மாதங்களுக்குள் ஆண்டுக்கு 250 கோடி என்ற அளவிலிருந்து 300 கோடி அளவிற்கு உயர்ந்த்தப்படும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார், எட்டு நாட்களுக்கு முன்பு பிரிட்டன் இந்தியாவில் இருந்து பயணிகளைத் வருவதற்கான தடையை அறிவிக்கும் முன்பு அவர் லண்டனுக்கு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ALSO READ | கோவிஷீல்டு தடுப்பூசியை வெளிநாடுகளில் தயாரிக்க திட்டம்: SII தலைவர் ஆதர் பூனவல்லா

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News