டெல்லி: இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும், சில பகுதிகளில் பாதிப்பு இல்லாமல் இருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது. அதுவும் கோவா மாநிலத்தை கொரோனா இல்லாத மாநிலமாக அறிவித்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 36 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 543-ஆக அதிகரித்துள்ளது. அதேபோல கொரோனா தொற்றுவில் இருந்து இதுவரை 2,546 பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சின் இணை செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்தார். 



20 நாட்களில் இரட்டிப்பு விகிதங்கள் குறைந்த மாநிலங்களின் நிலவரம் பின்வருமாறு:-


டெல்லி - 8.5 நாட்கள்,
கர்நாடகா - 9.2 நாட்கள்,
தெலுங்கானா - 9.4 நாட்கள்,
ஆந்திரா -10.6 நாட்கள்,
ஜே & கே (யூடி) - 11.5 நாட்கள்,
பஞ்சாப் - 13.1 நாட்கள்,
சத்தீஸ்கர் - 13.3 நாட்கள்,
தமிழ்நாடு -14 நாட்கள்
பீகார் -16.4 நாட்கள்.


 



இன்றைய சில முக்கியச் செய்திகள்:- 


ஆர்டி-பி.சி.ஆர் கிட் வேலை செய்யவில்லை என்பது குறித்து மேற்கு வங்கத்திலிருந்து எங்களுக்கு புகார்கள் வந்துள்ளன: ஐ.சி.எம்.ஆர்


விரைவான சோதனை கண்காணிப்புக்கானது, இது ஒரு நபரின் சோதனைக்கு பயன்படுத்தப்படாது: ஐ.சி.எம்.ஆர்


கடந்த 14 நாட்களில் 59 மாவட்டங்களில் கொரோனா ஒரு தொற்று கூட இல்லை: சுகாதார அமைச்சின் இணை செயலாளர் லவ் அகர்வால்


இப்போது கொரோனா தொற்று 7.5 நாட்களில் இரட்டிப்பாகின்றன, முதல் 3.5 நாட்களில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகின்றன: சுகாதார அமைச்சின் இணை செயலாளர் லவ் அகர்வால்


கடந்த 24 மணி நேரத்தில், 1553 கொரோனாவின் புதிய தோற்றுக்கள் உள்ளன: லவ் அகர்வால், சுகாதார அமைச்சின் இணை செயலாளர்


ஊரடங்கு உத்தரவு மீறப்படுகிறது. ஊரடங்கு உத்த்ரவின் நிலைமையை நாங்கள் கண்காணித்து வருகிறோம்: உள்துறை அமைச்சகம்