Sputnik V தடுப்பூசி மருந்து உற்பத்தி இந்தியாவில் தொடங்கியது
கொரோனாவில் இருந்து மீள, ஒவ்வொரு ஆண்டும் 300 மில்லியன் டோஸ் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி இந்தியாவில் தயாரிக்கப்படும்.
Sputnik V Vaccine Production in India: புதுடெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய மருந்து நிறுவனங்களில் ஒன்றான 'Panacea Biotec' மற்றும் ரஷ்யாவின் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் (RDIF) ஆகியவை நாட்டில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க பெரிய முடிவை எடுத்துள்ளன. இந்த இரண்டு நிறுவனமும் ஒவ்வொரு ஆண்டும் 10 கோடி ரஷ்ய தடுப்பூசி டோஸ்ஸான ஸ்பூட்னிக் வி (Sputnik V) ஐ தயாரிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.
தற்போது இந்தியாவில் கோவிஷீல்டு (Covishield), கோவாக்சின் (COVAXIN) ஆகிய கொரோனா தடுப்பூசி மருந்துகள் மூலம் முழுவீச்சில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. அந்தவகையில் இந்த வருசையில் மூன்றாவது மருந்தாக ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது.இந்த மருந்து தற்போது குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் சப்ளை செய்யப்படுகிறது.
ALSO READ | புதுச்சேரியில் Sputnik V தடுப்பூசி மையம் அமைக்க ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கோரிக்கை
மறுபுறம் இந்தியாவில் ஸ்புட்னிக்-வி (Sputnik V) தடுப்பூசி மருந்தை உற்பத்தி செய்யும் பணிகளும் நடைபெறுகின்றன. இதற்காக இந்தியாவின் பனேசியா பயோடெக் என்ற மருந்து உற்பத்தி நிறுவனம், ரஷியாவின் நேரடி முதலீட்டு நிதியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி மருந்து உற்பத்தி இன்று தொடங்கியது.
இந்த தடுப்பூசி இமாச்சல பிரதேசத்தில் உள்ள பனேசியா பயோடெக் நிறுவனத்தில் உற்பத்தி நடைபெறுகிறது. முதல் தொகுப்பு தடுப்பூசி மருந்து தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், மருந்தின் தரத்தை ஆய்வு செய்வதற்காக மாஸ்கோவில் உள்ள கமலேயா மையத்திற்கு அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷிய நேரடி முதலீட்டு நிதியத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, பனேசியா நிறுவனம் ஆண்டுக்கு 10 கோடி டோஸ் ஸ்புட்னிக்-வி மருந்து தயாரிக்க உள்ளது.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR