கடும் குளிரில் இருந்து காப்பாற்ற பசு மாடுகளுக்கு கம்பிளி வாங்க அயோத்தி நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வட மாநிலங்களில் கடும் குளிர் வட்ட துவங்கியுள்ள நிலையில் சாலையோரம் வசிக்கும் மக்கள் தொடர்ந்து அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். தலைநகர் டெல்லியில் (Delhi Air Pollution) நாளுக்கு நாள் காற்றின் மாசு அளவு அதிகரித்த வண்ணம் உள்ளது. காற்று மிகவும் மோசமடைந்து ஆபத்து அளவை எட்டி இருக்கிறது. தற்போது டெல்லி (Delhi) மக்கள் காற்றை சுவாசிக்க முடியாமல் திணறி வருகின்றனர். உலகிலேயே காற்று மாசு அதிகமாக இருக்கும் நகரமாக டெல்லி உருவெடுத்துள்ளது. கடந்த சில தினங்களாக டெல்லியில் மாசு கலந்த பனிமூட்டம் நிலவி வருகிறது. இந்த நிலைமையை சமாளிக்க முடியாமல் அனைவரும் திணறும் நிலை உருவாகி உள்ளது. இதனால் சாலை விபத்துக்கள், ரயில் தாமதம், விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. 


இந்நிலையில், பாஜக ஆளும் உத்திரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு பசுக்களை பாதுகாக்க பல நடவடிக்கைகளை நடத்தி வருகின்றது. இதை தொடர்ந்து, கடும் குளிரில் இருந்து பசுக்களை பாதுகாக்க மாடுகளுக்கு கம்பிளி வாங்க அயோத்தி நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 


பசு மாடுகளுக்கு அதீத முக்கியத்துவம் தரப்படும் உத்தரபிரதேச மாநிலத்தில் பைசிங்பூரில் முதற்கட்டமாக ஆயிரத்து 200 மாடுகளுக்கும், 700 காளைகளுக்கும் கம்பிளி, கையுறைகளை வாங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கோணிப்பை கொண்டு தயாரிக்கப்படும் ஸ்வெட்டர் ஒன்று 250 முதல் 350 ரூபாய் வரை விற்கப்படுகிறது. பசு மாடுகள் கடும் குளிரையும் சமாளிக்கும் வகையில் மூன்று அடுக்காக கோணி பைகள் வைத்து தைக்கப்பட்டுள்ளன.


அரசின் இந்த நடவடிக்கைக்கு மாநில காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. குளிரில் வாடும் பள்ளி மாணவிகளுக்கு ஸ்வெட்டர் வாங்கிக்கொடுக்காத மாநில அரசு, தற்போது மாடுகளுக்கு ஸ்வெட்டர் கொடுக்க முன் வருகிறது என்று விமர்சித்துள்ளது.