வருமான வரித்துறையை சேர்ந்த 12 மூத்த அதிகாரிகளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பாக கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின்பேரில் இவர்களின் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஊழல் புகாருக்கு ஆளானதாக இவர்களின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது அனைவரது மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தொடர்ந்து 2-வது முறையாக பொறுப்பு ஏற்றுள்ளது. நிதியமைச்சராக முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி வகித்து வருகின்றார். வருமானவரி, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வரித்துறை அதிகாரிகள் மீது அவ்வப்போது ஊழல் புகார்கள் வருவது உண்டு. 


இந்நிலையில் ஒருவாரத்திற்கு முன்பாக  லஞ்ச புகாருக்கு ஆளான வரித்துறை அதிகாரிகள் 12 பேருக்கு கட்டாய ஓய்வை அளித்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இந்த விவகாரம் நிதித்துறை, வரித்துறைகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


இந்நிலையில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான மேலும் 15 உயர் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வளித்து மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.


சர்வதேச அளவில் ஊழல் குறைவானதை அடிப்படையாக கொண்டு 180 நாடுகளை உள்ளடக்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா 3 இடங்கள் முன்னேறி 78-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.