CBSE நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (CTET) 20 மொழிகளில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசு பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா, நவோதயா, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், சைனிக் உள்ளிட்ட பள்ளிகளில் ஆரம்ப, உயர்நிலை வகுப்பு ஆசிரியர் பணிக்கு CTET தேர்வு அவசியமாகிறது. 




இந்த தேர்வுகள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பின் படி தேர்வானது 20 மொழிகளில் எழுதும் வசதி முன்னதாக இருந்த நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, குஜராத்தி என 17 மொழிகள் இப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. மேலும் இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம் மொழிகளில்தான் எழுத வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.


இந்த அறவிப்பிற்கு தமிழக அரசியல் கட்சிகள் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த தகவலினை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மறுத்தார். 


இந்நிலையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வினை முன்பு இருந்தது போல் 20 மொழிகளில் எழுதலாம் என பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். 


அதன்படி இந்தி, ஆங்கிலம், அசாமி, பெங்காலி, கோரா, குஜராத்தி, கன்னடா, மலையாளம், காஷி, மனிப்பூரி, மராத்தி, மிஜோ, நேப்பாளி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, திபேத்தியன் மற்றும் உறுது ஆகிய 20 மொழிகளில் தேர்வு நடத்தப்படவுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.