தெலுங்கானாவில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோயில், ரூ .1.11 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் ஆன மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தசரா திருவிழாவின் ஒரு பகுதியாக, அமைப்பாளர்கள் பல்வேறு மதிப்பு மற்றும் வண்ணங்களின் ரூபாய் நோட்டுகளை மலர்களாக வடிவமைத்து அவற்றை அம்மனுக்கு சூட்டியுள்ளார்கள். ரூபாய் நோட்டுகள் கொண்டு ஓரிகாமி பூக்களின் மாலைகள் தயாரிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தெலுங்கானாவின் ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்தில் உள்ள கோவிலில் இந்த தனித்துவமான அலங்காரம் செய்யப்பட்டது. 1,11,11,111 ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை அமைப்பாளர்கள் இந்த அலங்காரத்திற்கு பயன்படுத்தியுள்ளார்கள்.


இங்கு, ஆரிய வைஸ்ய சங்கத்தின் அனுசரணையில் நவராத்திரியின் (Navratri) போது தனலட்சுமியின் அவதாரத்தில் ஏராளமான பக்தர்கள் அம்பாளை வணங்குகின்றனர்.


COVID-19 தொற்றுநோயால் முன்பு எப்போதும் இல்லாத வண்ணம், இம்முறை பக்தர்களின் கூட்டம் குறைவாக இருந்தாலும், இந்த ரூபாய் நோட்டு மாலை, பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.


கோயில் பொருளாளர் பி.ராமு கூறுகையில், 2017 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தில் நிதி நெருக்கடி ஒரு பிரச்சனையாக இருந்து. எனினும், அப்போதும் 3,33,33,333 மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களால் அம்மனுக்கு அலங்காரம் செய்தாக தெரிவித்தார்.


ALSO READ: சிவனுக்கு வாகனம் நந்தி.... விநாயகருக்கு எலி... அப்போ மஹாலக்ஷ்மிக்கு?


பல்வேறு வண்ணங்களின் ரூபாய் நோட்டுகளை மாலைகள் மற்றும் பூங்கொத்துகளின் வடிவத்தில் வடிவமைக்கும் கலைஞர்களின் சேவையை தாங்கள் எடுத்துக்கொள்வதாக அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.


இந்த பிரசாதத்தின் தனித்துவமான விஷயம் என்னவென்றால், உள்ளூர் பக்தர்களிடமிருந்து பணம் சேகரிக்கப்பட்டு, கொண்டாட்டங்களுக்குப் பிறகு அவர்களிடம் திருப்பித் தரப்படுகிறது.


தொற்றுநோய் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக, அமைப்பாளர்கள் இந்த நேரத்தில் குறைந்த தொகையைத்தான் திரட்ட முடிந்து.


இந்த ஆண்டு சுமார் 50 பேர் நன்கொடை வழங்கினர். ஆனால் தனித்துவமான இந்த அலங்காரத்திற்கு தேவையான வகையில் பெறப்பட்ட ரூபாய் நோட்டுகளை மதிப்பு மற்றும் வண்ண ரீதியாக மாற்றுவதில் அமைப்பாளர்கள் நிறைய முயற்சிகளை எடுக்க வேண்டியிருந்தது.


எனினும், இறுதியாக அம்மனின் அலங்காரத்தைக் காணும்போது அனைவர் எடுத்த முயற்சியும் நல்ல பலனை தந்திருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ரூபாய் நோட்டு (Currency Notes) அலங்காரத்தில் அம்மனின் அழகு பார்ப்பவர் இதயத்தைக் கொள்ளைக்கொள்ளும் வகையில் உள்ளது.


ALSO READ: வாழ்கையில் நாம் மறந்தும் செய்யக்கூடாத செயல்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR