"டிட்லி" அதிதீவிர புயலாக மாறியுள்ளது. இதனால் நாளை காலை முதல் ஒடிசா மாநிலத்தின் கோபால்பூர் மற்றும் ஆந்திர மாநிலத்தின் கலிங்கப்பட்டிணம் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது கடற்கரைப் பகுதிகளில் கடல் கொந்தளிப்பு இருக்கும் என்றும் காற்று 145 கிமீ வேகத்தில் அடிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



மேலும் இந்த "டிட்லி" புயல் வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து பிறகு படிப்படியாக பலமிழக்கும். அடுத்த 24 மணி நேரத்திற்கு பிறகு மேற்கு வங்க மாநிலத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 


 



 



 




வங்க கடலின் மேற்கு மத்திய பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை மண்டலமாக மாறி, நேற்று புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு "டிட்லி" என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த புயல் தற்போது ஒடிசாவின் தென்கிழக்கில் சுமார் 530 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் அடுத்த 24 மணிநேரத்தில் தீவிரமாக மாற வாய்ப்பு உள்ளது. 


இந்த புயலால் ஒடிசா, தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் அடுத்த இரு இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. ஒடிசா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் உள்ள கடலோர பகுதிகளில் 90 கிமீ முதல் 100 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும். இதனால் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். கடலோர பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. 



ஒடிசா மாநிலம் முழுவதும் வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் கஜபதி, கன்ஜம், புரி, ஜகத்சிங்பூர் ஆகிய 4 மாவட்டங்களிலுள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை இரு தினங்களுக்கு மூட அரசு உத்தரவிட்டுள்ளது. ஒடிசா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் மீட்பு பணிகளுக்காக சிறப்பு மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.