ஒடிசாவை மிரட்ட வரும் தித்லி புயல்: பள்ளி, கல்லூரிகள் மூடல்
தித்லி புயல் காரணமாக ஒடிசா மாநிலத்தில் கஜபதி, கன்ஜம், புரி, ஜகத்சிங்பூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை இன்றும் நாளையும் மூட ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது.
தித்லி புயல் காரணமாக ஒடிசா மாநிலத்தில் கஜபதி, கன்ஜம், புரி, ஜகத்சிங்பூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை இன்றும் நாளையும் மூட ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய வங்க கடலில் ஏற்பட்டுள்ள புயலுக்கு ‘தித்லி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயல், நேற்று ஆந்திர-ஒடிஷா கடலோரப் பகுதியை நோக்கி நகர தொடங்கி உள்ளது. இதனால் நாளை ஆந்திரா - ஒடிஷா எல்லைகளின் கடலோர பகுதிகளை பலத்த சூறாவளி காற்று டன் புயல் தாக்கும் அபாயம் உள்ள தாக மத்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த புயலுக்கு ‘தித்லி’ என பெயரிடப் பட்டுள்ளது. நேற்று காலை கிழக்கு மத்திய வங்க கடலில் மையம் கொண்டிருந்த இப்புயல், மெது வாக வடக்கு மற்றும் வட மேற்கு பகுதியில், மணிக்கு சுமார் 12 கி.மீ வேகத்தில் நகர்ந்தது. ஆனால், இது மேலும் வலுவடைந்து நேற்று மாலை இப்புயல் ஒடிஷாவின் கோபால்பூருக்கு 560 கி.மீ தொலை விலும், ஆந்திராவின் கலிங்கப் பட்டினத்திற்கு 510 கி.மீ தொலை விலும் மையம் கொண்டுள்ளது.
இந்த புயல் மேலும் 24 மணி நேரத்தில் வலுவடைந்து புயலாக மாறி, ஆந்திரா-ஒடிஷா இடையே நாளை கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால், இந்த இரு மாநிலத்திலும் மீன் பிடிக்க யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஒடிசா தலைமை செயலாளர் ஆதித்ய பிரசாத் தலைமையில் அவரச ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில், 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை விடப்படுவதாகவும், மற்ற பகுதிகளுக்கு நிலைமை ஆய்வு செய்த பிறகு முடிவு செய்யலாம் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.