நீதி வென்றுள்ளது வழக்கறிஞர் ஆச்சார்யா
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதை தொடர்ந்து கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா கருத்து தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் உடனடியாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு ரூ10 கோடி அபராதத்தையும் உறுதி செய்தது உச்சநீதிமன்றம். சிறை தண்டனை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சசிகலா 10 வருடங்கள் தேர்தலில் நிற்கமுடியாது.
சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவரும் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்ததுடன், அவர்களுக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு தண்டனையையும் உறுதி செய்தது.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதன் மூலம் நீதி வென்றுள்ளதாக, கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.