பழைய 500 ரூபாய் நோட்டுகள் மாற்ற தேதி நீட்டிப்பு
பழைய ரூ.500 நோட்டுகளை குறிப்பிட்ட சில சேவைகளுக்கு மட்டும் வரும் டிசம்பர் 15-ஆம் தேதி வரை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான அவகாசம், வியாழக்கிழமை நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையில், பழைய ரூ.500 நோட்டுகளை மட்டும் சில குறிப்பிட்ட சேவைகளுக்கு டிசம்பர் 15-ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
பழைய ரூ.500 நோட்டுகளை பயன்படும் இடங்கள்:-
* அரசு பள்ளிகள், கல்லூரி கட்டணங்களுக்காக பழைய ரூ.500 நோட்டுகள் ஏற்கப்படும். அதிகபட்சம் ரூ.2,000 வரை கட்டணமாக செலுத்தலாம்.
* மத்திய மற்றும் மாநில அரசு கல்லூரிகளில் கட்டணம் செலுத்தலாம்.
* ரூ.500 வரையிலான ப்ரீ பெய்டு மொபைல் ரீசார்ஜ் செய்வதற்கும் பழைய ரூ.500 நோட்டுகளைப் பயன்படுத்தலாம்.
* நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலைகளில் ரூ.5000 மதிப்பிலான பொருட்களை ரூ.500 நோட்டுகளை கொண்டு ஒருமுறை மட்டும் வாங்கிக் கொள்ளலாம்.
* தனி நபர்கள் மற்றும் குடி யிருப்புகளுக்கான மின்சாரம், குடி நீர் கட்டணத்துக்காக ரூ.500 நோட்டுகளை செலுத்தலாம்.
* மத்திய அரசு அறிவிப்பின் படி சுங்கச்சாவடிகளில் டிசம்பர் 2-ம் தேதி வரை கட்டணம் செலுத்தத் தேவையில்லை. டிசம்பர் 3 முதல் 15-ம் தேதி வரை பழைய ரூ.500 நோட்டுகளை கொண்டு சுங்கக்கட்டணம் செலுத்தலாம்.
* வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், தங்கள் நாட்டு பணத்தை வாரத்துக்கு ரூ.5000 அளவில் மாற்றிக் கொள்ளலாம். வெளிநாட்டவர்கள் பணம் மாற்றும் விவரம் அவர்களின் பாஸ்போர்ட்களில் பதிவு செய்யப்படும்.