டிபி நோய்க்கு புதிய சிகிச்சை முறை அறிவிப்பு
டிபி நோய்க்கு மருந்து உட்கொள்ளும் முறைகள் மாற்றம்!!
டிபி நோய்க்கு மருந்து உட்கொள்ளும் முறையானது வாரத்திற்கு மூன்று முறை மட்டுமே பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால், இப்போது மத்திய அரசு சுகாதாரத்துறை அமைச்சகம் "பிக்சட் டோஸ் காம்பினேஷன்" என்று அழைக்கப்படும் டிபி மருந்துக் கலவையை தினசரி உட்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
மேலும், டிபி நோய் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்படும் என்றும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டிபி நோயின் தாக்கம் குறைந்துள்ளது என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா தெரிவித்துள்ளார்.