ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது மத்திய அரசின் கம்பீரத்தை காட்டுகிறது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அத்துடன் இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஜம்மு- காஷ்மீர் பிரிக்கப்பட்டும் எனவும், சட்டப்பேரவை கொண்ட யூனியன் பிரதேசமாக ஜம்மு- காஷ்மீரும், சட்டப்பேரவையற்ற யூனியன் பிரதேசமாக லடாக்கும் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


மத்திய அரசின் இந்த முடிவுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்பு தெரிவித்துள்ளார். 



இதுதொடர்பா அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுகளையில்., "காஷ்மீர் பிரச்சனையை மதம் சார்ந்த பிரச்சனையாக பார்க்க கூடாது, மனம் சார்ந்த பிரச்சனையாக பார்க்க வேண்டும். ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்ஸ்தை ரத்து செய்து வேற்றுமையை மத்திய அரசு சுட்டெரித்துள்ளது. தேசத்தின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவதற்கான முடிவை வரவேற்கும் சகாப்தம் இது. பகிரங்க முடிவை பலமாக எடுக்கும் தலைமைக்கு தலை வணங்குகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.