அமைதியை விரும்பும் அதேநேரத்தில், ஒரு அங்குல நிலத்தை கூட இந்தியா விட்டுத்தராது: Rajnath Singh
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் ராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற ஆயுத பூஜை நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.
எல்லைப்பகுதியில் சீனா தொடர்ந்து அத்துமீறி வருகிறது என்றும் இந்த விவகாரத்தில் இந்தியா அமைதியை நிலை நாட்ட வேண்டும் என விரும்பும் நேரத்தில், ஒரு அங்குல நிலம் கூட விட்டுத்தரமாட்டாது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath Singh) எச்சரித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் ராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற ஆயுத பூஜை நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். மேற்கு வங்க மாநிலத்தை ஒட்டியுள்ள எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்யும் போது, டார்ஜிலிங்கில் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது தனது உரையில், அண்டை நாடுகளுடன் நல்லுறவை பேணுவதையே இந்தியா விரும்புவதாகவும், ஆனால், அட்டூழியங்களை சகித்து கொள்ளாது என்றும், ஒரு அங்குல நிலம் கூட விட்டுக் கொடுக்கப்பட மாட்டாது எனவும் கூறினார். நமது எல்லைகளையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்காக நமது ராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்யவும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
தாய்நாட்டை பாதுகாக்க கால்வான் பள்ளத்தாக்கில் 20 வீரர்கள் தங்களது இன்னுயிரை தந்து தியாகம் செய்துள்ளாக Rajnath singh கூறினார்.
தனது டார்ஜலிங் பயணத்தின் போது அங்குள்ள ராணுவ தளபதிகள் மற்றும் அதிகாரிகளுடன் உரையாடிய பின்னர் ராணுவ தளவாடங்களை பார்வையிட்டார்.
டார்ஜிலிங்கில் உள்ள சுக்னா போர் நினைவிடத்தில் தசரா தினத்தன்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை ஆயுத பூஜையை நடத்தினார்.
கிழக்கு லடாக்கின் எல்லை பதற்றத்தை கருத்தில் கொண்டு இராணுவத் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மறுஆய்வு செய்வதற்காகவும், தசரா பண்டிகையை வீரர்களுடன் கொண்டாடுவதற்காகவும் அங்கு சென்ற பாதுகாப்பு அமைச்சர் உடன், இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம்.நாரவனே-ம் அங்கு சென்றார்
ALSO READ | பண்டிகை காலத்தில் மக்கள் உள்ளூர் தயாரிப்புகளை வாங்கி ஊக்குவிக்க வேண்டும்: பிரதமர் மோடி
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR