தற்சார்பு இந்தியா: ₹28,000 கோடி திட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்
இந்திய ராணுவத்தின் கரங்களை வலுப்படுத்தும் வகையிலும், தற்சார்பு இந்தியாவை ஊக்குவிக்கும் வகையிலும் 28,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய ராணுவத்தின் கரங்களை வலுப்படுத்த, பாதுகாப்பு அமைச்சகம் பெரிய அளவில் ஆயுதங்களையும், ராணுவ உபகரணங்களையும் வாங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்திய இராணுவத்தின் மூன்று பிரிவுகளுக்கும் 28,000 கோடி ரூபாய் செலவில் ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் வியாழக்கிழமை தகவல் அளித்தனர். கிழக்கு லடாக் எல்லையில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் (China) இடையே நீண்டகால மாக பதற்றம் நிலவி வரும் இந்த நேரத்தில் இந்த கொள்முதல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இதில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள அனைத்து ஆயுதங்களும் இராணுவ உபகரணங்களும் உள்நாட்டு நிறுவனங்களின் தயாரிப்பாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath singh) தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (DAC) உள்நாட்டு தொழில்துறையிலிருந்து ரூ .27,000 கோடி மதிப்புள்ள ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை வாங்கும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ் மொத்தம் ஏழு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ரூ .28,000 கோடி மதிப்புள்ள ஏழு திட்டங்களின் கீழ், 'மேக் இன் இந்தியா' மற்றும் 'தற்சார்பு இந்தியா' (Aathmanirbhat Bharat) பிரச்சாரத்தை ஊக்குவிக்க இந்திய தொழில்துறையினரிடம் இருந்து வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
ராணுவத்திற்காக ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்கும் திட்டங்களில் டிஆர்டிஓ தயாரித்த விமானங்களை கண்டறிந்து முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் அமைப்புகள், கடற்படைக்கான அடுத்த தலைமுறை ரோந்து கப்பல்கள் மற்றும் இராணுவத்திற்கான கண்காணிப்பு உபகரணங்கள் ஆகியவை அடங்கும்.
ALSO READ | CMS-01 செயற்கைக்கோளை சுமந்தபடி விண்ணில் சீறிப்பாய்ந்தது PSLV-C50..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR