தலைநகர் டெல்லியில் காற்று மாசு, இன்று மீண்டும் மோசமான நிலைக்குச் செல்லும், என மத்திய காற்றுத்தரம் மற்றும் தட்ப வெப்ப ஆய்வு அமைப்பு தகவல்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி: தலைநகர் டெல்லியில் இன்று காலை காற்றின் தரக் குறியீடு (AQI) 239 ஆக மோசமான' நிலையில் காணப்படுகிறது. தலைநகர் டெல்லியில் (Delhi Air Pollution) நாளுக்கு நாள் காற்றின் மாசு அளவு அதிகரித்த வண்ணம் உள்ளது. காற்று மிகவும் மோசமடைந்து ஆபத்து அளவை எட்டி இருக்கிறது. தற்போது டெல்லி (Delhi) மக்கள் காற்றை சுவாசிக்க முடியாமல் திணறி வருகின்றனர். உலகிலேயே காற்று மாசு அதிகமாக இருக்கும் நகரமாக டெல்லி உருவெடுத்துள்ளது. கடந்த சில தினங்களாக டெல்லியில் மாசு கலந்த பனிமூட்டம் நிலவி வருகிறது. இந்த நிலைமையை சமாளிக்க முடியாமல் அனைவரும் திணறும் நிலை உருவாகி உள்ளது. இதனால் சாலை விபத்துக்கள், ரயில் தாமதம், விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. 


இந்நிலையில், டெல்லியின் காற்று மாசு ஞாயிற்றுக்கிழமை லேசான முன்னேற்றத்தைப் பதிவு செய்திருந்தாலும், காற்றின் தரக் குறியீடு (AQI) மோசமான நிலையில் உள்ளதால் மக்களுக்கு சுவாசிப்பதில் சற்று கடினமான நிலை ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த AQI-ன் அளவு 'மோசமான' நிலையான, 239 ஆக உள்ளது என்று வானிலை முன்னறிவிப்பாளர் SAFAR தெரிவித்துள்ளது. இன்று கலை 9 மணியளவில், இந்தியா கேட்டைச் சுற்றி 253 (மோசமான நிலை) இல் AQI பதிவு செய்யப்பட்டது.


சாந்தினி சௌக் பகுதியில், இரவு பத்து மணிவரை காற்றின் தரமானது 246 ஆக இருந்தது. இது மீண்டும் `மோசமான` பிரிவில் உள்ளது. இதை தொடர்ந்து நண்பகல் 2.5 மணியளவில் காற்றின் தரம் 328 ஆக உயர்ந்து மிகவும் மோசமான நிலையை அடைந்தது. லோதி சாலையில் இரவு 10 மணி வரை காற்று மாசு 135-ஆக இருந்தது. இதை தொடர்ந்து நண்பகல் 2 மணியளவில் மீண்டு காற்று மாசானது மிகவும் மோசமான நிலையை எட்டியது. அண்டை மாநிலங்களில் விவசாயிகள் வயலில் மிஞ்சிய கழிவுகளை தீயிட்டுக் கொளுத்துவதால் தலைநகரில் காற்று மாசு அடைந்துள்ளது. டெல்லியின் இடைவிடாத வாகனப்போக்குவரத்தால் இந்தப் பிரச்சினை மேலும் அதிகமாக காணப்படுகிறது. 


டெல்லி நகர மக்கள் முக கவசங்கள் அணிந்தும் பெண்கள் துப்பட்டாவால் முகங்களை மூடிக் கொண்டும் நடமாடுகின்றனர். சிலர் கைக்குட்டைகளில் முகத்தை மூடிக் கொள்கின்றனர். மிகவும் ஆரோக்கிய கேடான காற்று என நேற்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது.கிட்டதட்ட 25 நாட்களாக டெல்லியில் காற்றுமாசுபட்ட அவசர நிலை நீடிக்கிறது. ஏராளமானோர் தொண்டைப் புண், சுவாசப் பிரச்சினை,கண்களில் எரிச்சல், குளிர் காய்ச்சல் போன்ற உடல் நல பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்.