டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரியின் வீடு நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்களால் சூறையாடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் போது மனோஜ் திவாரி தாக்குதலுக்கு உள்ளான வீட்டில் இல்லையென்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சம்பவம் குறித்து போலீஸ் வட்டாரங்கள், திவாரிக்கு கீழ் பணி புரியும் ஒருவர் கார் விபத்து சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், எதிர் தரப்புக்கும் திவாரியின் பணியாளர் தரப்புக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது. இதையடுத்து, எதிர்தரப்பினர் அவருடைய நண்பர்களுடன் திவாரியின் வீட்டை சூறையாடியுள்ளனர்.


இது குறித்து திவாரி அவரது டிவிட்டரில்:-


 



 


'டெல்லி வடக்கு அவென்யூவில் இருக்கும் எனது வீட்டில் 10 பேர் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்' என்று பதிவு செய்துள்ளார். இந்த தாக்குதலின் மொத்த காட்சிகளும் சிசிடிவி கேமரா ஒன்றில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து, போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 


 மேலும், இச்சம்பவத்தில் திவாரியின் பாதுகாவலர் தாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.